7 மணி நேரம்… 10 மில்லியன்: சாதனை படைத்த த்ரெட்ஸ்!

Published On:

| By Monisha

ட்விட்டருக்கு போட்டியாக இன்று (ஜூலை 6) களமிறங்கிய த்ரெட்ஸ் அறிமுகமான 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளில் ட்விட்டர் செயலி பிரபலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அவர் கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியடைய செய்தது.

எலான் மஸ்க் இறுதியாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 10,000 பதிவுகளையும், அதிகாரப்பூர்வ கணக்கு இல்லாதவர்கள் 1,000 பதிவுகளையும், புதிதாக லாக் இன் செய்த பயனர்கள் 500 பதிவுகளையும் படிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.

எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பும் ட்விட்டர் பயனாளிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

மஸ்க்கின் செயல்களால் ட்விட்டர் மீது அதிருப்தியில் சமூக வலைத்தள பயனாளிகள் உள்ள நிலையில் தான் ட்விட்டர் செயலி போலவே செயல்படும் ‘த்ரெட்ஸ்’ செயலியை அறிமுகம் செய்வதாக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தார்.

அதன்படி இன்று (ஜூலை 6) ‘த்ரெட்ஸ்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் பயனாளர் ஐடியை த்ரெட்ஸ் செயலியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பல நிறுவனங்கள், தனிநபர்கள் என லாக் இன் செய்ய தொடங்கியுள்ளனர்.

த்ரெட்ஸ் செயலியை அறிமுகம் செய்த 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் விரைவில் 10 மில்லியன் பயனர்களை பெற்ற செயலி என்ற சாதனையை த்ரெட்ஸ் படைத்துள்ளது.

இந்த வரிசையில் சேட் ஜிபிடி 5 நாட்களில் 10 மில்லியன் பயனர்களை பெற்று 2வது இடத்திலும், இன்ஸ்டாகிராம் 2.5 மாதங்களிலும், ஸ்பாடிஃபய் 5 மாதங்களிலும்,

பேஸ்புக் 10 மாதங்களிலும், ட்விட்டர் 2 ஆண்டுகளிலும், நெட்பிளிக்ஸ் 2.5 ஆண்டுகளிலும் 10 மில்லியன் பயனர்களை பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

ட்விட்டருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் ட்விட்டர் டிரெண்டிங்கில் இருப்பது தான் மேலும் சுவாரஸ்யமான விஷயமாக இருக்கின்றது.

மோனிஷா

டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியை ஒதுக்குகிறாரா ஸ்டாலின்?

ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ’காவாலா’: எப்படி இருக்கு?