This week tamil tv top 10 serials
|

இந்த வார டாப் 10 :  உங்களுக்கு பிடித்த சீரியல்கள் இருக்கிறதா?

சினிமாவில் ஓர் திரைப்படத்தின் வெற்றியை பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான் முடிவு செய்யும்…அதேபோல் சின்னத்திரையில் ஒரு சீரியலின் வெற்றியை டிஆர்பி புள்ளிகள் தான் முடிவு செய்கிறது.

இந்த டிஆர்பி புள்ளிகளை வைத்து தான் எந்த சீரியலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பதை கண்டறிவார்கள். அந்த வகையில் இந்த வாரம் வெளியான டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள சீரியல்கள் எவை என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த டிஆர்பி பட்டியலில் 9.88 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ள தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “எதிர்நீச்சல்”. இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவு சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து இந்த வாரமும் முதலிடத்தை பிடித்துள்ளது எதிர்நீச்சல் தொடர்.

அடுத்து 9.61 புள்ளிகளுடன் “கயல்” தொடர் பல வாரங்களாக தனது 2வது இடத்தை விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்து கொண்டிருக்கிறது.

3வது இடத்தில் 9.12 புள்ளிகளுடன் சுந்தரி தொடர் உள்ளது.

8.95 புள்ளிகளுடன் வானத்தைப் போல தொடர் 4வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சென்ற வாரம் 5ஆவது இடத்தில் இருந்த “இனியா” தொடரை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” தொடர் 8.17 டிஆர்பி புள்ளிகள் பெற்று ஓவர் டேக் செய்து 5வது இடத்தை பிடித்து விட்டதால், 8.16 புள்ளிகளைப் பெற்று 6வது இடத்தில் “இனியா” தொடர் உள்ளது.

அடுத்து, 7.86 டிஆர்பி புள்ளிகளுடன்   “மிஸ்டர் மனைவி” தொடர் 7வது இடத்தில் உள்ளது.

7.65 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி தொடர் 8வது இடத்தில் உள்ளது.

9வது இடத்தில் 6.70 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் உள்ளது.

இறுதியாக  6.27 டிஆர்பி புள்ளிகளை பெற்று ஆனந்த ராகம் தொடர் 10 வது இடத்தில் உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் டிவி சீரியல்களுக்கென ஒரு தனி கிரேஸ் உருவாகி விட்டது.

டிவியில் மட்டுமல்லாமல் யூடியூபிலும், ஓடிடி தளங்களிலும் கூட சீரியல் பார்ப்பவர்கள் அதிகரித்து விட்டனர்.

இன்னும் அந்தப் பட்டியலை தனியாக எடுத்துப் பார்த்தால் அது நிச்சயம் நம்மை ஆச்சரியப்படுத்தும்.

– கார்த்திக் ராஜா

பின்னால் வந்த பைக்… திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… பறிபோன உயிர்!

கூட்டணி முறிவு: கருப்பண்ணன் கருத்துக்கு கே.பி.முனுசாமி மறுப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts