அணிலின் தாகம் தீர்த்த இளைஞர்: வைரல் வீடியோ!

Published On:

| By Jegadeesh

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெயிலில் இருந்து உடல் வெப்பத்தை தணிக்க மனிதர்களாகிய நாம் குளிர்பானங்கள் , இயற்கை பானங்கள் போன்றவற்றை அருந்துவோம்,

அதே நேரம் கோடை காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பது கடினமான ஒன்று.

இதை கருத்தில் கொண்டு, சிலர் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளிலும், வீட்டின் வெளிப்புறத்திலும் குடிப்பதற்காக தண்ணீர் வைப்பதுண்டு.

இதன்வழியே தண்ணீர் தேடி அலையும் பறவைகள் மற்றும் விலங்குகள் தங்களது தாகத்தை தீர்த்துக்கொள்ளும். இப்படித்தான் இளைஞர் ஒருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி ஹ்யூமன் பீயிங் பிரதர்ஸ் என்ற சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ள அந்த வீடியோவில் தாகம் தேடி அலைந்த அணிலுக்கு இளைஞர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் மூலம் நீர் கொடுத்து தாகத்தை தணிக்கிறார்.

பின்பு அந்த இளைஞர், அதை கையில் எடுத்து தடவிக் கொடுக்கிறார். அந்த அணிலும் பாசத்துடன் அவர் கையில் ஏறுகிறது.

இந்த வீடியோ 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நான் ராஜினாமா செய்கிறேனா?: டி.கே.சிவக்குமார் காட்டம்!

தோனியிடம் ஆட்டோகிராஃப் : சுனில் கவாஸ்கர் நெகிழ்ச்சி!