மும்பை பந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு தொலைப்பேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் ஹைதராபாத்தில் கைது செய்தனர். அவர் குடிபோதையில் இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.
புனேயில் உள்ள முந்த்வா பகுதியில் பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் 11-வது மாடியில் கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு நேற்று (பிப்ரவரி 12 ) இரவு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் அங்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறியுள்ளார். பின்னர், அலுவலக ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர்,வெடிகுண்டு செயல்இழப்பு பிரிவு, மோப்பநாய் உதவயுடன் கூகுள் அலுவலகம் முழுவதையும் சோதனை செய்துள்ளனர்.
இந்த சோதனைக்கு பிறகு அங்கு வெடிகுண்டு இல்லை என்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து புனே துணை காவல் ஆணையர் விக்ரந்த் தேஷ்முக் கூறுகையில் “ புனே கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு செயல்இழப்பு பிரிவு, மோப்பநாய் ஆகியவற்றுடன் சென்று ஆய்வு செய்தோம். வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அழைப்பு போலியானது என்பது தெரியவந்தது. அழைப்பு செய்தவர் குறித்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அது ஹைதராபாத் என்பது தெரியவந்தது.
அந்த எண்ணுக்குரிய முகவரியை தொடர்பு கொண்டபோது, அந்த அழைப்பு செய்தவர் குடிபோதையில் இவ்வாறு செய்தது தெரியவந்தது என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்