door broke in alaska airlines Boeing plane

நடுவானில் உடைந்த கதவு… போயிங் விமானத்தில் அலறிய பயணிகள் : நடந்தது என்ன?

டிரெண்டிங்

door broke in alaska airlines Boeing plane

கலிபோர்னியா நோக்கிச் சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்ட சிறிது நேரத்தில், கதவு திடீரென உடைந்து விழுந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மாநிலமான ஓரிகானில் உள்ள போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737-9 MAX விமானம் கலிபோர்னியாவின் அண்டாரியோ விமான நிலையம் நோக்கி உள்ளூர் நேரப்படி மாலை 5.07 மணிக்கு புறப்பட்டது. அதில் 171 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர்.

ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் கதவு கழன்று கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறிய நிலையில், அவசர ஆக்ஸிஜன் முகமூடிகள் திறக்கப்பட்டது.

இதுகுறித்து விமானிகள் போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து சுமார் 16 ஆயிரம் அடிக்கு (4,876 மீட்டர்) மேலே ஆபத்தான நிலையில் பறந்து கொண்டிந்த விமானம், சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு (5.26 மணி) போர்ட்லேண்டில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சிஇஓ பென் மினிகுசி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,

“171 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் விமானம் மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட அச்சத்தை புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதனையடுத்து அலஸ்கா ஏர்லைன்ஸ் வசமிருக்கும் 65 போயிங் 737-9 விமானங்களும் அடுத்த சில நாட்களில் முழு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவை விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளன.

door broke in alaska airlines Boeing plane

379 பயணிகள் தப்பித்த சம்பவம்!

சமீபத்தில்  உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலைய ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த கடலோர காவல்படை விமானத்தின் மீது ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்  மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 379 பேரும் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட நிலையில், கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பாகிஸ்தானை க்ளீன் ஸ்வீப் செய்த ஆஸ்திரேலியா… கண்ணீர் விட்ட வார்னர்!

பாலஸ்தீனத்துக்காக ஓர் கையெழுத்திடுங்கள்- பப்ளிஷர்ஸ் ஃபார் பாலஸ்தீன் அமைப்பின் வேண்டுகோள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : “போலீசார் மீது கொலை வழக்கு” – உயர் நீதிமன்றத்தை நாடிய ஸ்னோலின் தாய்!

door broke in alaska airlines Boeing plane

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0