”வாரிசு பொங்கல்” கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

டிரெண்டிங்

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் இன்று (ஜனவரி 4 ) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே விஜய் ரசிகர்கள் ”வாரிசு பொங்கல்” என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் ரஷ்மிகா நடித்துள்ள படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் குடும்ப கதையம்சத்தை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், வாரிசு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இது குறித்து ட்விட்டரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், “வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஜனவரி 4 ) மாலை 5 மணிக்கு வெளியாகும். என்று கூறியுள்ளது.

இந்நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகும் என்பதால் விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். காலை முதலே சமூக வலைதளங்களில் ”வாரிசு பொங்கல்” என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டு செய்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த பொங்கலுக்கு துணிவு படமும் ரிலீஸ் ஆகவுள்ளதால் கடும் போட்டியாக வாரிசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நயன்தாராவின் தங்கமனசு: நெகிழ்ந்த குழந்தைகள்!

போலியோ 3 ஆவது தவணை சொட்டு மருந்து!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *