HBD Dhoni: சீரியஸாக கேக் வெட்டிய ‘தல’ தோனி… சட்டென சிரிப்பூட்டிய சாக்‌ஷி

Published On:

| By indhu

'Thala' Dhoni's birthday! - Cake cutting and celebration!

“தல” தோனி இன்று (ஜூலை 7) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்யின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ரசிகர்களால் “தல” என்று அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனி இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தோனிக்கு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புகைப்படங்களை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு தோனி தனது பிறந்தநாளை மனைவி சாக்‌ஷியுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோனியின் நெருங்கிய நண்பர்கள், இந்தி நடிகர் சல்மான்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கேக் வெட்டிய பின்னர் தோனியும், சாக்‌ஷியும் மாறி மாறி கேக்கை பரிமாறிக்கொண்டனர். அப்போது, தோனியின் காலைத் தொட்டு வணங்கிய தனது மனைவியை, ஆசிர்வாதம் செய்வது போல அவர் சைகை செய்தார்.

அதன்பின்னர், சால்மான்கானுக்கு கேக் ஊட்டினார் தோனி. பதிலுக்கு அவரும் கேக் கொடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெற்றிக் கோப்பைகளின் நாயகன்!

2004 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாடி உள்ளார். 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி மொத்தமாக 17,266 ரன்களை எடுத்துள்ளார்.

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது 2007ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. பின்னர் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையையும், 2013ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையையும் இந்திய அணி வென்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன் தோனிதான். 2 முறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”மதுவிலக்கு அமலானால் கள்ளச்சாராயம் அதிகமாகும்” : கமல்ஹாசன்

ஓய்வை அறிவித்த ஜான்சீனா: 90’ஸ் கிட்ஸ் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel