லேட்டாப் என்பது பணிபுரிவோர் மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரி செல்வோருக்கும் அத்தியாவசிய ஒன்றாகவே மாறிவிட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு மின்னணு சாதனங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது.
டெக்னோ நிறுவனம் மெகாபுக் டி 1 என்ற புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. மேல்பாகம் நானோ அலுமினியத்தைக் கொண்டு உறுதியாக உழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மெகாபுக் டி 1 லேப்டாப் 11வது தலைமுறை ப்ராசசரைக் கொண்டுள்ளது.
கோர் ஐ 3, கோர் ஐ 5 மற்றும் கோர் ஐ 7 போன்ற மூன்று மாடல்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
8GB, 12GB, 16GB என்ற ரேம் வேரியன்ட்களில் கிடைக்கும் மெகாபுக் டி 1 லேப்டாப்பின் நினைவகத் திறனை 1TB வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
16.5 இன்ச் எச்டி ப்ளஸ் திரை அளவையும், 14.8 மி.மீ தடிமனையும் கொண்டுள்ள இந்த மெகாபுக் டி 1 லேப்டாப் டெமின் ப்ளூ, மூன்ஷைன் சில்வர், ஸ்பேஸ் கிரே ஆகிய நிறங்களில் விற்பனையில் உள்ளது.
மிகவும் மெல்லியதாக எளிதில் கையாளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் எடை 1.56 கிலோகிராம் ஆகும்.
டெக்னோ மெகாபுக் டி 1-ல் 70Wh நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 17.5 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
பேட்டரி விரைவாக சார்ஜ் செய்து கொள்வதற்கு வசதியாக 65W அல்ட்ரா சார்ஜரும் வழங்கப்படுகிறது.
டச் கன்ட்ரோல் அடிப்படையில் செயல்படும் பட்டன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.40,000 முதல் தொடங்கும் இதன் விலையானது மாடல் மற்றும் வேரியன்ட்டிற்கு ஏற்ப வேறுபடும்.
2MP FHD கேமரா உடன் Privacy shutter, வை-பை, ப்ளூடூத் 5.0, வையர்லெஸ் கார்ட், டூ இன் ஒன் power key மற்றும் fingerprint sensor போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. லேப்டாப் சூடேறுவதை கட்டுப்படுத்த விசி கூலிங் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.
-பவித்ரா பலராமன்
பின்னால் வந்த பைக்… திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… பறிபோன உயிர்!
கூட்டணி முறிவு: கருப்பண்ணன் கருத்துக்கு கே.பி.முனுசாமி மறுப்பு!