ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ தங்களது வாடிக்கையாளர்களை கவருவதற்காக, வித்தியாசமான முறையில் அவர்களது தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவது உண்டு.
அந்த வகையில், ஸ்விக்கி தனது ட்விட்டர் பதிவில், தளபதி விஜய் உங்கள் விருந்தினராக இருந்தால், அவருக்கு நீங்கள் எந்த உணவை ஆர்டர் செய்வீர்கள்?” என்று பதிவிட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவிற்கு, ரசிகர்கள் தங்களது விருப்பமான உணவு வகைகளை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் நடித்த போக்கிரி படத்தில் இடம்பெற்ற உப்புமா காட்சியை ஒருவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் நடிகர் விஜய்க்கு நான் உப்புமா ஆர்டர் செய்யவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிலர், தாங்களே நடிகர் விஜய்க்கு சமைத்து கொடுப்பேன் என்றும் பதிவிட்டுள்ளனர்.
ஸ்விக்கி நிறுவனத்தின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
செல்வம்
அப்பு ஆம்புலன்ஸ் : நன்கொடை வழங்கிய பிரகாஷ்ராஜ்