சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ் மொழி மீது காதல் கொண்டு தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார்.
சுவீடன் நாட்டை சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் ஆடம். இந்தியாவில் தனது பெயரை ஸ்ரீராம் என்று மாற்றி வைத்து கொண்டுள்ளார்.
தமிழைக் கற்றுக் கொண்டதோடு, அழகாக பேசவும் செய்கிறார். இது பற்றி ஆடம் கூறுகையில், “தமிழ் மொழியை பேசும் போது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆகவேதான் இந்த நாட்டு மக்களைப் போல வேஷ்டி, சட்டை, துண்டு எல்லாம் அணிந்துள்ளேன்.
எனக்குப் பிடித்து விஷயத்தை செய்கிறேன். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்பது எனது ஆராய்ச்சி மூலம் அறிந்துகொண்டேன். இந்த மொழிக்குப் பின்னால் உள்ள வரலாற்றையும் அதன் வேர்களையும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.
தமிழ் பற்றிய தேடல் எனக்குச் சுவாரஸ்யம் தந்ததால், எனக்குத் தமிழ் பிடித்துப் போனது” என்கிறார். மேலும், ஒரு தமிழ்ப் பெண்ணைதான் திருமணம் செய்ய விரும்புவதாகவும் ஆடம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் வலம் வரும் ஆடம், பல கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். அதோடு வேட்டி, சட்டை அணிந்து தமிழ்நாட்டுக்காரர் மாதிரியே தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கோவை, தஞ்சை, திருச்சி போன்ற நகரங்களுக்கும் ஆடம் விசிட் அடித்துள்ளார்.
தமிழர்கள் அன்பாகவும் நேர்மையாகவும் இருப்பதாகவும் ஆடம் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். அருகிலுள்ள கேரளாவுக்கும் சென்றதாகவும் அங்கிருக்கும் மக்களுக்கு தமிழர்களுக்கும் பெரிய வேறுபாட்டை பார்க்கவில்லை என்றும் ஆடம் சொல்கிறார்.
ஏற்கனவே, 90ஸ் கிட்ஸுகளுக்கு தமிழ்ப் பெண்கள் கிடைக்காமல் திருமணமாகாமல் தவித்து வரும் நிலையில், இப்போது இந்த ஸ்வீடன் இளைஞரும் போட்டிக்கு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மீண்டும் வினேஷ் போகத் களத்துக்கு திரும்ப பிரகாசமான வாய்ப்பு… மனம் மாறுமா?
ஆவணி மாத நட்சத்திர பலன் – பூரட்டாதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)