விமானத்தில் ’வாரிசு’: வைப் செய்த சூர்யகுமார்

Published On:

| By Jegadeesh

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விமானத்தில் செல்லும் போது நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை பார்த்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரராக கலக்கி வருபவர் சூர்யகுமார் யாதவ். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் சூர்யகுமார் யாதவ் 605 ரன்களை அடித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 5 அரை சதங்களும் அடங்கும்.

இதனிடையே, நேற்று (மே26) குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 2 வது குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குஜராத் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 223 ரன்களை குவித்தது.

பின்னர், 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்னில் அவுட்டாகி வெளியேற சூர்ய குமார் யாதவ் மட்டும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் அவர், 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். இருந்த போதும் மும்பை அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில், குஜராத் அணியுடனான தோல்விக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இன்று (மே27) விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பினர்.

அப்போது விமானத்தில் செல்லும்போது சூர்யகுமார் யாதவ், நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்து ரசித்தபடி செல்வதை சக வீரர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள், இவரும் விஜய் ரசிகர் தான் போல என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கர்நாடகா புதிய அமைச்சரவை: யார் யாருக்கு எந்த துறை?

புதிய நாடாளுமன்றம்: கொண்டாடுகிறேன் குடியரசுத் தலைவரோடு…குழப்பும் கமல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share