இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடி முடித்துள்ளது.
இதில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.இதனிடையே 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் இரண்டு அணிகளும் நேரடியாக மோத உள்ளன. இதில், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் நேற்று (ஜூலை 27) பார்போடாஸ் பிரிஜ் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது.
இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாமல் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டிருந்தார்.
அதேவேளையில் இந்த ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடிய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து விளையாடிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக , சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக திருவனந்தபுரம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, அவருக்கு ஆதரவாக சூர்யகுமார் யாதவ் சமூகவலைதள பக்கமான ட்விட்டர் (எக்ஸ்)-ல் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இச்சூழலில் தான் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் அவரது ஜெர்சியை அணிந்து நேற்றைய போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்