நடிகர் ஜெய், நயன்தாரா உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டதை தொடர்ந்து ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறார் நயன்தாரா.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படத்தை இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ”சீ ஸ்டுடியோஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ்” இணைந்து தயாரிக்கின்றன.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் ஜெய் பிறந்தநாளான இன்று (ஏப்ரல் 6) ஃபஸ்ர்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு, “லேடிசூப்பர் ஸ்டார் 75 குடும்பத்திற்கு நடிகர் ஜெய்-ஐ வரவேற்கும் போது “சந்தோஷத்தில் கண்ணு வேர்க்குது” என்று குறிப்பிட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்திற்கு பிறகு 2வது முறையாக ஜெய் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளனர்.
இதனால் இந்த அறிவிப்பு வெளியான உடனேயே ரசிகர்கள் பலரும் இந்த படம் ராஜா ராணி போன்று ஒரு காதல் கதையாக இருக்குமோ என்று சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். இதனால் ட்விட்டரில் நயன்தாரா டிரெண்டிங்கில் உள்ளார்.
மோனிஷா
பல்பீர் சிங்கிற்கு கண்டனம்: நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்!
முழுமையாக முடங்கிய நாடாளுமன்றம்: காங்கிரஸ் பேரணி!