கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை சன்னிலியோன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
76வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் மே 16 ஆம் தேதி தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற இந்த திரைப்பட விழாவில் பல மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும்.
இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், மிருணாள் தாக்கூர், சாரா அலிகான், இஷா குப்தா, அதிதி ராவ், சன்னி லியோன், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்கின்றனர்.
நேற்று (மே 24) கேன்ஸ் விழாவில் சன்னி லியோன் நடித்துள்ள கென்னடி படம் திரையிடப்பட்டது. படம் திரையிடலில் நடிகை சன்னிலியோன், படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், சக நடிகர் ராகுல் பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கென்னடி படம் திரையிடுவதற்கு முன்னர் படக்குழுவினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சன்னி லியோன், இளஞ்சிவப்பு நிற உடையில் அழகாக நடந்து வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
இதனையடுத்து சன்னிலியோனின் புகைப்படங்கள் இணையத்தில் பரவ தொடங்கி ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் நடிகை சன்னிலியோன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, ”கென்னடி மற்றும் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுதுவதை விட எதிலும் அதிகமாகப் பெருமைப்பட முடியாது. எனக்கும் ஒட்டுமொத்த அணிக்கும் இது ஒரு அற்புதமான தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.



மோனிஷா
தமிழ் வழி பொறியியல் படிப்பு நிறுத்த உத்தரவு வாபஸ்: அண்ணா பல்கலைக்கழகம்