பியூட்டி டிப்ஸ்: சம்மரில் முகம் பளபளப்புடன் இருக்க…

டிரெண்டிங்

பன்னீர் ரோஜா இதழ்களைப் பாலுடன் சேர்த்து அரைத்து முகம், கழுத்து, கை மற்றும் கால் போன்ற வெயில் நேரடியாகப்படும் இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், அங்குள்ள கருமை நீங்குவதோடு முகம் பட்டுப்போல மிருதுவாகும்.

இரவில் உள்ளங்காலில் பசு நெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துவிட்டு தூங்குவது, உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பது ஆகியவை கண்களின் சூட்டைத் தணிக்கும்.பச்சையாகச் சாப்பிடக்கூடிய வெள்ளரிக்காய், கேரட் போன்ற காய்கறிகளை நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் சாப்பிடலாம்.

பருவகால காய்கனிகள் மற்றும் நீர்ச்சத்து அதிகமுள்ள மாதுளை, தர்பூசணி, நுங்கு, கிர்ணி, முலாம் பழம், வெள்ளைப் பூசணி, பரங்கிக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, புடலங்காய் ஆகியவற்றைச்  சாப்பிடலாம்.

இயற்கை, அந்தந்த காலநிலைக்கு உடலின் தேவைக்கு ஏற்பவே சீஸனல் பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கிறது. இந்த சீஸனில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தை, சூடு என்று சொல்லி சிலர் ஒதுக்குவார்கள். வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்ற பாதிப்பு இருப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் தாராளமாக மாம்பழம் சாப்பிடலாம்.

எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சேர்த்து… அசைவ உணவுகள் (குறிப்பாக உடற்சூட்டை அதிகரிக்கும் சிக்கன்), அதிக காரம், புளிப்பு, மசாலா ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தாகம் எடுத்தால் உடனே தண்ணீர் அருந்தவும். ‘அப்புறமா குடிக்கலாம்’ என்று தள்ளிப் போட வேண்டாம். மண்பானைத் தண்ணீர் மிக நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: உடல்பருமனால் கால் வலிக்குமா?

மாயவரம் சிறுத்தையும் கோயம்புத்தூர் ஆடும்:அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: காலமான புகழேந்தி… புதிய மாவட்டப் பொறுப்பாளர் யார்?

திருச்சி : பாஜக தலைவர் நட்டா ரோடுஷோவுக்கு அனுமதி?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0