சம்மர் டிப்ஸ்: சருமப் பராமரிப்புக்கு ஐந்து ஈஸி டிப்ஸ்!

டிரெண்டிங்

வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதில் சருமப் பராமரிப்பு என்பது மிகவும் அவசியமாகிறது. சம்மரில் நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை…  ஐந்து ஈஸி டிப்ஸ் இதோ…

செய்ய வேண்டியவை

1. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வெயிலில் வெளியே செல்வதாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்யுங்கள். வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்கள் முன்பாக சன்ஸ்கிரீன் அப்ளை செய்வது அவசியம்.

2. உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்வு செய்து பயன்படுத்தவும்.

3. வெயில் காலத்தில் அதிக காரமான உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், ஊறுகாய், போன்றவை செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் ஹார்மோன் பிரச்னை ஏற்பட்டு முகத்தில் கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகம். எனவே, இது போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

4. சிந்தெடிக், பாலியெஸ்டர் ஆடைகள் வியர்வையை சரியாக உறிஞ்சாது. அதனால் சருமத்தில் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. எனவே, காட்டன் ஆடைகளை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

5. கண்களைச் சுற்றி இருக்கும் சருமம் மிக மிருதுவாக இருக்கும். நாம் வெயிலில் செல்லும்போது கண்களைச் சுருக்கி வைத்திருப்போம். இது தொடரும்போது, கண்களைச் சுற்றிய பகுதியில் சுருக்கங்கள் வர வாய்ப்பு உண்டு. எனவே, வெயிலில் செல்லும்போது கூலிங் கிளாஸ் அணிவது நல்லது.

செய்யக் கூடாதவை

1. டீ, காபி, ஐஸ்க்ரீம் போன்றவை உடலின் சூட்டை அதிகப்படுத்தும். இவற்றைத் தவிர்த்து உடலை குளுமை அடையச் செய்யும்  பழங்கள் (சீசனில் கிடைப்பவை), இளநீர், மோர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2. வெயில் நேரத்தில் உலர் பழ வகைகளைச் சாப்பிடுவது தவிர்த்து, ஃப்ரெஷ் பழங்களை சாப்பிடும் போது உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைக்க முடியும்.

3. கடினமான உடற்பயிற்சிகள் செய்யும்போது வியர்வை வழியாக உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறும். உடல் எளிதில் வறண்டு விடும். எனவே, வெயில் நேரத்தில் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

4. பிற்பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் சருமம் எளிதில் கருமையடையும். எனவே, பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிருங்கள்.

5. தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெளியில் செல்லாதீர்கள். சாதாரண நாளில் சராசரியாக 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானதாக இருக்கும். ஆனால், வெயில் நேரத்தில் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதன் மூலம், சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் ரெய்டு!

மோடி ரோடுஷோவில் மாணவர்கள் : போலீஸ் பதிலளிக்க உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *