Summer Skin Care Tips

பியூட்டி டிப்ஸ்: கோடையிலும் உங்கள் சருமம் பளபளக்க…

டிரெண்டிங்

சரும அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் பல வைட்டமின்களின் பங்கு உண்டு. வைட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள், வைட்டமின் ஈ நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள், வைட்டமின் டி உள்ள பால் அல்லது நட்ஸ் மில்க் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். Summer Skin Care Tips

இந்த வைட்டமின்கள் அனைத்தும் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையையும் ஒட்டுமொத்த பிரகாசத்தையும் மேம்படுத்தக்கூடியவை.

கேரட், பீட்ரூட், ஆரஞ்சு, தக்காளி ஆகியவற்றில் தினமும் ஏதேனும் ஒரு ஜூஸ் குடிக்கலாம். இவற்றில் மிகக் குறைந்த அளவு நாட்டுச் சர்க்கரையோ, சிறிதளவு உப்பும், மிளகுத்தூளுமோ சேர்த்துக் குடிப்பது சிறந்தது.

மாதுளை, தர்பூசணி போன்றவற்றை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பழமாகவோ, சர்க்கரை சேர்க்காத ஜூஸாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல நெல்லிக்காய், புதினா, கொத்தமல்லி, வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்த ஜூஸ் சருமத்தைப் பளபளவென மாற்றும்.

இளநீர், அதன் வழுக்கை, நீர்மோர் எடுத்துக்கொள்ளலாம். காய்கறி சாலட், ஃப்ரூட் சாலட், பொரியல், ஜூஸ் என எல்லாவற்றிலும் எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்துக் குடிப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கிவி, பசலை, பூசணி, கேரட் போன்றவற்றில் இருக்கும் பீட்டா-கரோட்டின், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும். இந்த உணவுகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், வயதான தோற்றத்தைத் தடுத்து கொழுப்பு சவ்வுகளைப் பாதுகாக்கும்.

செலினியம் நிறைந்த சூரியகாந்தி விதைகள், மீன் ஆகியவை சருமத்தின் இளமைத் தோற்றத்துக்கு உதவக்கூடியவை. இவை சரும நிறத்தை மேம்படுத்தி, பளபளப்பாக்கக்கூடியவை.

ஸிங்க் எனப்படும் துத்தநாகச் சத்து நிறைந்த உணவுகளை உங்கள் சருமத்துக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நட்ஸ், பருப்புகள், முழுத் தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் துத்தநாகச் சத்து அதிகமிருக்கும்.

இது சருமத்தை வறண்டுபோகாமலிருக்க இயற்கையான எண்ணெயைச் சுரந்து, புறச்சூழலால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் சருமத்தைக் காக்கும். Summer Skin Care Tips

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: ஆடைகளுக்கு ஏற்ற காலணியைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம்!

ஹெல்த் டிப்ஸ்: பூக்களால் அலர்ஜியா? சமந்தா சொல்வது நிஜமா?

ஓ.. இதான் அந்த பழிக்கு பழியா? : அப்டேட் குமாரு

இமாச்சல் : மெஜாரிட்டி இருந்தும் ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *