புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் இன்ஸ்டாகிராமில் மாணவர்கள் சிலர் மழை காரணமாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
‘நாங்கள் 2கே கிட்ஸ்’ என்று சொல்லிக்கொண்டு இன்றைய இளம் தலைமுறையினர் செய்யும் சேட்டைகள் எண்ணில் அடங்காதவை.
அந்த வகையில் மழை காரணமாக விடுமுறை கேட்டு மாணவர்கள் சிலர் புதுக்கோட்டை ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதுதான் தற்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்.
லீவ் விடுங்க மேம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு பணிபுரிந்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மாணவர்கள் சிலர் மழை காரணமாக விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கை வைத்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
“மழை அதிகமாக இருக்கிறது நாளை லீவ் விடுங்க”, “உதவி செய்யுங்க, உங்களை நம்பிதான் இருக்கிறேன்.
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்காகவும் ஒரு நாள் லீவ் விடுங்க மேம்” என்று அக்டோபர் 9 ஆம் தேதி மாணவர் ஒருவர் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கனமழை காரணமாகப் அக்டோபர் 10 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்திருந்தார் மாவட்ட ஆட்சியர்.
விடுமுறை கேட்டு குறுஞ்செய்தி அனுப்பிய மாணவர்கள், விடுமுறை அளித்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
நன்றி தெரிவித்ததோடு அடுத்த நாளும் விடுமுறை அளிக்கக் கூறி ”செல்லம் நாளைக்கு லீவ்” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
“மிக்க நன்றி மேம், உங்களை நான் மறக்க மாட்டேன். நீங்கள் ஒரு தேவதை” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “லீவ் விட்டால் உங்களுக்கு மனசுக்குள்ள கோவில் கட்டுறேன்”, “நாங்க தினமும் லீவ் கேட்கவில்லை. என்றாவது ஒரு நாள் தான்.
அந்த ஒரு நாள் லீவ் நாளைக்கு விடுங்க. நீங்க எடுக்குற முடிவுலதான் பலருடைய சந்தோஷம் இருக்கிறது” என்று கெஞ்சியபடி கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டை ஆட்சியர் கவிதா ராமு தனது முகநூல் பக்கத்தில் “ஹாஹா ! இன்ஸ்டாவில் சில குறுஞ்செய்தி கோரிக்கைகள்” என்று பதிவிட்டுள்ளார்.
பார்வையாளர்கள் கருத்து
இந்த பதிவைப் பார்த்த நெட்டிஷன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதில் ”நான் படிச்ச காலத்துல இன்ஸ்டாகிராம் இல்லாம போச்சே”, “நான் உங்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடரத் தவறிவிட்டேன், இப்பொழுதே நட்பு அழைப்பை அனுப்பிவிடுகிறேன்”, என்றெல்லாம் கமெண்ட் செய்துள்ளனர்.
இந்த பதிவுகள் தற்போது வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மோனிஷா
அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!
’என் மீது எப்போதும் அன்பு வைத்திருந்தவர் கோவை தங்கம்’: முதல்வர் இரங்கல்!