மாணவர் சங்க தேர்தல் : மாணவிகளின் காலில் விழும் இளைஞர்கள்!

Published On:

| By srinivasan

பல்கலைகழக தேர்தலில் வாக்களிக்க வருமாறு கல்லூரி மாணவிகளின் காலில் மாணவர்கள் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் பல்கலைக்கழகம் மாநிலத்தின் முதன்மையான நிறுவனம் ஆகும். இதற்கு கீழ் ராஜஸ்தான் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா முடிந்து தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால் மாணவர் சங்க தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு, இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) சார்பில் ரிது பராலா, நரேந்திர யாதவ் (ஏபிவிபி) நிஹாரிகா ஜோர்வால், நிர்மல் சவுத்ரி, பிரதாப்பனு மீனா என பலரும் போட்டியிட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுமார் ஆறு லட்சம் கல்லூரி மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் பாரத்பூர் பல்கலைக்கழக தேர்தலில் வாக்களிக்க வருமாறு கல்லூரி மாணவிகளின் காலில் மாணவர்கள் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மாணவர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசியின் அதிர்ச்சி பட்டியல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share