வோடாபோனில் இருந்து தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளாதீர்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் ஜெட் ஏர்வேஸ் சிஇஓ சஞ்சீவ் கபூர்.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில், முதல் 3இடங்களில் தொடர்ந்து வோடாபோன் உள்ளது. இந்நிறுவனத்துக்கு மொத்தம் 24கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர்.
இந்நிலையில் 9ஆண்டுகளாக வோடாபோன் வாடிக்கையாளராக இருந்த ஜெட் ஏர்வேஸ் சிஇஓ சஞ்சீவ் கபூர் தற்போது வோடாபோன் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வோடாபோன் சேவையை மாற்ற வேண்டாம் என என்னைத் திரும்பத் திரும்ப அழைக்காதீர்கள். 9ஆண்டுகளாக இந்த சேவையைப் பயன்படுத்திய நான் தற்போது ஏன் மாறுகிறேன் என்ற காரணத்தைச் சொல்லிவிட்டேன்.
ஒன்று இந்தியாவில் சில பகுதிகளில் கவரேஜ் மிக மோசமாக உள்ளது. மற்றொன்று சில நாடுகளில் சர்வதேச ரோமிங் திட்டங்கள் குறைவாக இருக்கிறது. அவ்வளவுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் என்று சஞ்சீவ் கபூர் கூறியிருந்த போதிலும், வோடாபோன் சேவை பிரிவிலிருந்து அவருக்குத் தொடர்ந்து அழைப்பு வந்திருக்கிறது.
இதற்கு அவர், “அழைக்க வேண்டாம் என்று சொல்லியும், எங்கள் சேவையில் பிரச்சினை இருக்கிறதா எனக்கேட்டு மீண்டும் அழைப்பு வருகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அபத்தமானது. அழைப்பு வருவதை நிறுத்த என்ன செய்ய வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு வோடாபோன் தரப்பில், “பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத்தான் தொடர்பு கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சஞ்ஜீவ்கபூர், தயவுசெய்து அழைக்காதீர்கள் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சஞ்ஜீவ் கபூரின் ட்வீட்டுகள் வைரலாக, ட்விட்டர் பயனர் ஒருவர், வோடாபோன் சிறந்த சர்வதேச ரோமிங் திட்டங்களைக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த சஞ்ஜீவ் கபூர், அவர்கள் நீண்ட காலத்துக்கு இந்ததிட்டத்தைச் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், வோடாபோன் பயனர்கள் சிலர் அவர்களும் இதே பிரச்சினைகளை எதிர்கொண்டதாகப் பகிர்ந்துள்ளனர்.
பிரியா
Comments are closed.