ஸ்டாலின் பிறந்தநாள்: உலக அளவில் ட்ரெண்டிங்!

டிரெண்டிங்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1 ) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக் ( #HBDMKStalin70) ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ட்விட்டர் தளத்தில், ஒவ்வொரு நாளும் ஏற்படும் விவாதங்களின் அடிப்படையில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகும். அப்படிதான் இன்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்ட ஹேஷ்டேக் உலக அளவில் டாப் 5-ல் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை முதலே சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு #திராவிடாநாயகன்70 , #happybirthdaycm , #hbdstalin என்ற ஹேஷ்டேக் மூலம் திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

பின்னர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான ஹேஷ்டேக் பயன்படுத்தினால் ட்ரெண்டிங்கில் வர முடியாது என்பதை அறிந்து கொண்ட திமுக ஐடி விங் #HBDMKStalin70 என்ற அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக்கை அறிமுகபடுத்தியது.

இதற்காக திமுக ஐடி விங் அலுவலகத்தில் திமுகவினர் எப்படியும் ட்ரெண்டிங்கில் வந்த விட வேண்டும் என்பதற்காக இந்த ஹேஷ்டேக்கை இரவு முதல் ட்விட்டர் பதிவேற்ற ஆரம்பித்துவிட்டனர்.

இதனிடையே, திமுக தொண்டர்களும் #HBDMKStalin70 ஹேஷ்டேக்கை விடியவிடிய பயன்படுத்தியதன் மூலம் உலக அளவில் டாப் 5-ல் இந்த ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ்குமார்

ஒரேநாளில் இரண்டு முதல்வர்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர்

ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர்: தடையை நீக்க மறுத்த நீதிமன்றம்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *