இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எஸ்.எஸ்.எல்.வி எனப்படும் “ஸ்மாட் சேட்டிலைட் லான்ஞ் வெகிக்கிள்” ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டானது இன்று ( ஆகஸ்ட் 7 ) காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் சிறப்பம்சம்
பி.எஸ்.எல்.வி ராக்கெட் 1860 கிலோ வரை எடையுள்ள செயற்கை கோள்களை விண்ணில் சுமந்து செல்லக்கூடியது. ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட் 4000 கிலோ எடை வரையில் உள்ள செயற்கை கோள்களை விண்ணில் சுமந்து செல்லக்கூடியது. அந்தவகையில், எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டானது மைக்ரோ, நானோ என 500 கிலோ எடையுள்ள செய்ற்கை கோள்களை விண்ணில் சுமந்து செல்லும் திறனுடயது. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளின் விலையை ஒப்பிடும் போது எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட் விலை குறைவானது. எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டிற்கு 6 மணி நேர கவுண்டவுன் போதுமானது. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட்டுகளை போல் 25 மணி நேரம் கவுன்ட் டவுன் இந்த வகை ராக்கெட்டுக்கு தேவைப்படாது.
சிறிய அளவு செயற்கைகோள்
மினி, மைக்ரோ, நானோ செயற்கை கோள்களுக்கான சந்தையானது மிகப்பெரிய தற்போது அதிகரித்துள்ளது. அந்தவகையில், சிறிய அளவிலான செயற்கைகோள்களை அனுப்புவதற்கான முற்சியாகத் தான் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவு ராக்கெட்டில் செயற்கை கோள்களை அனுப்பும்போது செலவு குறைவாகிறது. இதனால் சிறிய அளவிலான செயற்கை கோள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கடலோர நிலங்களின் பயன்பாடு மற்றும் பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபட தயாரிப்பு பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும், 750 பள்ளி மாணவர்களால் எட்டு கிலோ எடை கொண்ட அசாதி சாட் செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் தயாரிப்பில் மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் ஈடுபட்டனர்.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ”இ.ஓ.எஸ் – 02, ஆசாதி சாட்” ஆகிய இரண்டு செயற்கை கோள்களை சுமந்தபடி இன்று காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
இதுகுறித்து இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், “SSLV-DI ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அனைத்து நிலைகளும் எதிர்பார்த்தபடியே நடந்தன. டெர்மினல் கட்டத்தில் தரவு இழப்பு காணப்படுகிறது. இது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் புதுப்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
–செல்வம்
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்!