ஹெல்த் டிப்ஸ்: வாலிப வயோதிகர்களே… இனி மருத்துவர்களிடம் செல்லாதீர்கள்!

Published On:

| By Minnambalam Desk

சமீபத்தில் அதிகரித்திருக்கும் குழந்தையின்மை பிரச்சினைக்கு விவரம் தெரியாத ஆண்களை வளைத்துப் போட காத்துக்கொண்டிருக்கும் மஞ்சள் நோட்டீஸ் உட்பட விதவிதமான நிறங்களில் விளம்பரம் செய்யும் போலி மருத்துவர்களின் கூட்டம் ஒருபுறம்… பாலியல் விஷயங்கள் குறித்து போதுமான தெளிவு இன்மையால் தவிக்கும் இளைஞர் கூட்டம் மற்றொரு புறம்.

இந்த நிலையில் நாம் பாரம்பரியமாகப் பின்பற்றிய உணவியல் பிரிவுகளுள் ஆண்களுக்கான தனித்துவமான உணவியல் மிக முக்கியமானது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். அவற்றின் பட்டியலையும் தருகிறார்கள்.

“வெள்ளைப் பூசணிக்காயைத் துருவி பாலும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அதில் நெய்யில் தாளித்த முந்திரி சேர்த்துக் கலந்தால் சூப்பர் அல்வா தயார். இதே போல கேரட், பீட்ரூட் ஆகியவற்றையும் துருவி அல்வா போலச் செய்து மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

முருங்கைக்காய்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த பிறகு விதைகள் மற்றும் சதைப் பகுதியை மட்டும் எடுத்து வழக்கமாகத் தயாரிக்கும் வடை மாவுடன் கலந்து எண்ணெயில் வடையாகப் பொரித்து சாப்பிடலாம். இந்த முருங்கை வடை புதுமையாகவும் இருக்கும். அதே நேரத்தில் வீரியமிக்கது. Special food List for Fertility

பேரீச்சை, பிஸ்தா, பால் கொட்டை நீக்கிய நான்கு பேரீச்சம் பழங்கள், இரண்டு அக்ரூட், இரண்டு முந்திரி, இரண்டு பிஸ்தா ஆகியவற்றை கொஞ்சம் பால் விட்டு அரைத்து தனியே வைக்கவும். ஒரு டம்ளர் கொதிக்க வைத்த பாலுடன் இந்தக் கலவை, நாட்டுச் சர்க்கரை கலந்து தினசரி ஒரு முறை பருகலாம். இரவில் படுக்கும் போது பனங்கற்கண்டு சேர்ந்த பாலும் உட்கொள்ளலாம்.

தூதுவளை, பசலை, சிறுகீரை, முருங்கைக் கீரை, தாளிக் கீரை… இவை ஐந்தும் ஆண்களின் டயட்டில் அடிக்கடி இடம்பெற வேண்டியவை தூதுவளைத் துவையல் சளி, இருமலுக்கு மட்டுமன்றி, வீரியத்துக்குமானது. பசலைக் கீரையைப் பருப்பு சேர்த்து கடையலாகச் செய்து நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட உடல் வலிமை பெறும். சிறுகீரையும் இவ்வகையிலானதே. முருங்கைக் கீரையின் பலன்கள் குறித்து சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. வாரம் ஒரு முறை முருங்கைக்கீரை பொரியல் கட்டாயம் அவ்வப்போது முருங்கைக்கீரை சூப்பும் உதவும்.

முட்டையில் ஆம்லெட் போடும்போது வெங்காயத்தோடு சேர்த்து கொஞ்சம் முருங்கைப் பூ அல்லது முருங்கைக் கீரையைத் தூவிச் சாப்பிடலாம். நண்டு ரசமும், நண்டுக் குழம்பும் ஆண்களுக்கான சிறப்பு உணவுகள். மேற்சொன்ன உணவியலைப் பின்பற்ற, மாற்றத்தை நிச்சயம் உணர்வார்கள் ஆண்கள்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share