இந்திய திரையுலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமெளலி. இவர் இயக்கிய ஆர்.ஆர். ஆர். படம் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது.
சிறந்த நடன அசைவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட ’நாட்டு நாட்டு’ பாடல், ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ’நாட்டு நாட்டு ’ பாடலுக்கு தென் கொரியா தூதர் சாங் ஜே போக்குடன் தூதரக ஊழியர்கள் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் உள்ள தென் கொரியா தூதரகத்தில், தூதரும் தூதரக ஊழியர்களும் ஆடும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ நேற்று (பிப்ரவரி 25 ) வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கொரிய தூதரகத்தின் ஊழியர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆடியதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தென் கொரியா தூதர் சாங் ஜே போக், தூதரக ஊழியர்களுடன் ஆடுவதை பாருங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பாராட்டி ட்விட்டரில் பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, “உற்சாகமான, அபிமானமான குழு முயற்சி இது” என குறிப்பிட்டுள்ளார்.
95வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட நிலையில் இந்த விழாவிலும் நாட்டு நாட்டு பாடல் விருதை பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஸ்டாலின் பிறந்தநாள்: கமலுக்கு அழைப்பு…பின்னணி இதுதான்!
டிராவிட் வேண்டாம்: பயிற்சியாளரில் மாற்றம் வேண்டும்…ஹர்பஜன் சிங் கோரிக்கை!