இந்தியா முழுவதும் பரவலாக டிஜிட்டல் மோசடி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் நாடு முழுவதும் உள்ள பல காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சௌந்தர்யா, டிஜிட்டல் மோசடியில் தான் 17 லட்சம் ஏமாந்தது பற்றி பேசி இருந்தார்.
ஏற்கனவே, சௌந்தர்யா மீது கலவையான விமர்சனங்கள் இருப்பதால் அவர் மக்களிடம் இரக்கத்தை சம்பாதிக்க இப்படி ஒரு கதையை கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்தது. ஆனால், உண்மையிலேயே சௌந்தர்யா பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் சௌந்தர்யா தன்னுடைய தோழிகளுடன் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். திரும்பி வரும் போது, ரயிலில் தன்னுடைய போனை சார்ஜர் போட்டு இருக்கிறார். பொதுவாக ரயிலில் சார்ஜர் பாயிண்ட் ஜன்னல் ஓரமாகத்தான் அமைந்திருக்கும். சவுந்தர்யா சார்ஜர் போட்ட போனை திடீரென ஒருவர் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்.
இதுகுறித்து, டெல்லி காவல்நிலையத்தில் சௌந்தர்யா புகார் கொடுத்துள்ளார். அதன் பின்னர், சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யாவுக்கு வீடியோ கால் ஒன்று வந்துள்ளது.
அதில், சிபிஐ அதிகாரி போல பேசிய ஒருவர், உங்களுடைய நம்பர் மூலம், சிம்லாவில் இருந்து சீனாவுக்கு சில முக்கிய தகவல்கள் சென்றிருக்கின்றன. இதுதொடர்பாக விசாரிக்க தான் உங்களை தொடர்பு கொண்டேன் என்று கூறியுள்ளார்.
பல போலி டாக்குமெண்டுகளையும் அனுப்பி போதை மருந்து கடத்தியதாகவும் மிரட்டியுள்ளார். இதனால், சௌந்தர்யா மிரண்டு போயுள்ளார். நீங்கள் நேர்மையாக சம்பாதித்திருந்தால், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் 12 அக்கவுண்டுக்கு அனுப்ப வேண்டும். நாங்கள் எல்லாம் சரி பார்த்து விட்டு , உங்கள் சம்பாத்தியம் சரியாக இருந்தால் உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பி விடுவோம் என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே பயந்து போயிருந்த சௌந்தர்யா யாரோ தனது பெயரை வைத்து ஏதோ செய்துள்ளனர் என்று கருதி, தனது வங்கிக் கணக்கில் இருந்த 17 லட்சத்தை 12 வங்கிக்கணக்குகளில் டிரான்ஸ்பர் செய்துள்ளார். அவ்வளவுதான் அத்தனையும் போச்சு. இப்போது வரை, பணத்தை ஏமாற்றியவர்களை பிடிக்க முடியவில்லை.
இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் நிலையில், சௌந்தர்யா பிக்பாசில் கட்டுக்கதை விடுவதாக பலரும் விமர்சித்ததால், சௌந்தர்யாவின் பெற்றோர், காவல்நிலையத்தில் கொடுத்த எஃப்ஐஆர் நகலை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பச்சை கோழி ரத்தத்தை குடித்த கான் ‘வாய்’ சான்: இந்தியாவில் தண்டனை என்ன?
சிவகார்த்திகேயன் தந்த பரிசு! : ஜீவி பிரகாஷ் நெகிழ்ச்சி