ஹெல்த் டிப்ஸ்: முழங்காலில் வலி… தவிர்க்க சில வழிகள்!

Published On:

| By Selvam

நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படும் வலிகளுக்கு ஓரளவு தீர்வு காண இந்த வழிமுறைகள் உதவும்…

நான்கு அல்லது ஐந்து ஐஸ் கட்டிகளை ஒரு துண்டில் கட்டி, வலியுள்ள இடத்தில் 10 – 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கலாம். இருபது நிமிடங்களுக்கு மேல் இதை செய்யக் கூடாது.

அப்படிச் செய்தால் தோலில் பாதிப்புகள் ஏற்படும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை வலியும் வீக்கமும் குறையும் வரை இந்த ஒத்தடத்தைக் கொடுக்கலாம்.

சூடான நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுப்பதும் பயன் தரும்.

மூன்று அல்லது நான்கு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலை வலியுள்ள இடத்தில் தடவி, 10 -15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம்.

இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்து வந்தால், முழங்கால் வலி குறையும்.

வலியுள்ள காலை சோஃபா அல்லது தலையணை மீது முடிந்த வரை உயர்த்தி வைத்திருக்கலாம். இது வீக்கம், வலியைக் குறைக்கும்.

உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தால், மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு முழங்கால் வலி வரும்.

சரியான சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தால் எடை கட்டுக்குள் இருக்கும். வலியும் குறையும்.

சரியான அளவில், பொருத்தமான ஷூ, செருப்பு போன்றவற்றை அணிவது கால் வலியில் இருந்து பாதுகாப்பு தரும்.

ஷூ வாங்கும்போது உள்ளே இருக்கும் பஞ்சு போன்ற பொருள் வசதியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். அதேபோல் ஒரு இன்ச்சைவிடப் பெரிய ஹீல் வைத்த ஷூ, செருப்பு வாங்கக் கூடாது.

நாம் உட்காரும் முறைகூட முழங்கால் வலிக்குக் காரணமாக இருக்கலாம்.  திடீரென ஒரு நாள் நம்மை அறியாமல் உட்காரும் முறையை மாற்றினால், வலி  குணமாகும் ஆச்சர்யம் நிகழலாம்.

வீக்கம், வலி போன்றவற்றுக்கான காரணங்கள் தெரிந்தால், இந்த வழிமுறைகள் நிச்சயம் பலன் கொடுக்கும். மற்றபடி, நீண்ட நாட்களாகத் தொடரும் வலி, கடுமையான வலிகளுக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வதே சிறந்தது என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மன்னராட்சியா? மக்களாட்சியா? : அப்டேட் குமாரு

தீபத் திருவிழா : திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

விழுப்புரம் : வெள்ளம் வடிந்தும், வடியாத சாதி பூசல்!

கெட்டுப்போன நிவாரண அரிசியை சாலையில் கொட்டிய மக்கள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாள்… 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

”ஆதவ் அர்ஜுனாவின் நட்பு, விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல” – அமீர் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share