காலையில் எழுந்ததிலிருந்து அலுவலகம் சென்று வரும் வரை நமக்கு அலைச்சல் அதிகமாக காணப்படும். வீட்டிற்கு சென்று எப்பொழுது தூங்க போகிறோம் என்ற எண்ணம் எல்லாருக்கும் வருவது இயல்பு.
அப்படி அசதியால் சில விஷயங்களை நாம் செய்யாமலே தூங்கிவிடுவோம். தூங்குவதற்கு முன் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் சில இருக்கின்றன. அந்த செயல்களை நாம் செய்வதால் நமது தூக்கம் கண்டிப்பாக பாதிக்கப்படக் கூடும்.
தூக்கம் பாதிக்கப்படுவதால் வீண் மன உளைச்சல், ஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இங்கு அது போன்று உறங்கும் முன் செய்யக்கூடாத, சில செயல்கள் கீழே குறிப்பிடப்பட உள்ளன.
தூங்குவதற்கு முன்னர் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டாம். அப்படி குடிக்கும் போது சிறுநீர் கழிக்க அடிக்கடி எழும்ப வேண்டி வரும். இதனால் தூக்கம் பாதிக்கப்பட கூடும்.
சிலர் தூங்கும் ஆர்வத்தில் சிறுநீர் கழிக்காமல் அடக்கி கொள்வார்கள். அப்படி செய்வதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. எனவே உறங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
மதியம் உணவிற்கு பிறகு சிறிது நேரம் உறங்கும் பழக்கம் பொதுவாக சிலருக்கு உள்ளது. இந்த பழக்கத்தினால் இரவில் நல்ல தூக்கம் வராமல் தடுக்கும்.
மதியம் தூங்குவதால் இரவில் சரியான நேரத்திற்கு தூக்கம் வராமல், தூக்கமின்மை போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுவீர்கள்.
இந்த குட்டி தூக்கம் உங்கள் உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகும். எனவே மதியம் குட்டி தூக்கத்தை தவிர்த்து விடுவது நல்லது.
இன்றைய மக்கள் மத்தியில் அதிகமாக தூங்குவதற்கு சில நிமிடம் வரை கணினி திரையையோ, செல்ஃபோனையோ, பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் உள்ளது. அனால் அது மிகவும் தவறு.
இந்த பழக்கத்தினால் கண்கள் சோர்வடைய செய்கின்றன. கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகளும் உள்ளன. செல்ஃபோன் ஸ்க்ரீனில் இருந்து விழும் வெளிச்சம், முகத்தில் படுவதால் முகத்தில் தோல் சுருக்கம் எற்படும்.
உறக்கத்திற்கு முன் உடற்பயிற்சி செய்வது என்பது, ஒரு போதும் செய்யக் கூடாத விஷயம். உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் சிலர் நேரம் காலம் பார்க்காமல், உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். அவ்வாறு செய்யகூடாது.
உறங்குவதற்கு 3 மணி நேரம் முன்னதாக எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்து முடித்திட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுபஸ்ரீ
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை!
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: ஜவாஹிருல்லா கோரிக்கை!
பியூட்டி டிப்ஸ்: ‘ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்’ – உடலில் ஏற்படும் தழும்புகளை நீக்க முடியுமா?