முறையான எடைக்குறைப்பு என்பதில் சரிவிகித உணவு, தொடர்ச்சியான உடற்பயிற்சிகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட பல கூட்டு நடவடிக்கைகள் அடங்கியிருக்கின்றன. எனவே, எடைக்குறைப்புக்கு ஒரு விஷயம் மட்டுமே உதவி செய்யாது. ஆனாலும், பொதுவாக சில அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், புரதம், முழு தானியம் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவையே உடலில் எடையையும், அழற்சியையும் அதிகரிக்கும் முக்கிய வில்லன்களாக உள்ளன.
அதேபோல் உணவு உட்கொள்ளும்போது மற்ற விஷயங்களில் கவனத்தைச் சிதறடிக்காமல் உண்ண வேண்டும். உணவின் மீது மட்டுமே முழு எண்ணமும் வேண்டும். அப்போதுதான் அதிகம் உணவு உட்கொள்வதை மூளை தடுக்கும்.
மேலும், வாழ்க்கை முறை மாற்றங்களான உடலில் போதுமான நீர்ச்சத்தைப் பராமரிப்பது, போதுமான அளவில் தூங்குவதும் எடை மேலாண்மையில் பெரும்பங்கினை வகிக்கிறது.
இருப்பினும் எடையைக் குறைக்க வேண்டும் என்ற முடிவில் நீங்கள் இருந்தால் தகுதி பெற்ற மருத்துவர் அல்லது டயட்டீஷியனை அணுக வேண்டும்.
இதன்மூலம் உங்கள் உடல்நிலைக்கேற்ற தனித்துவமான உணவுத்திட்டத்தையும், உடற்பயிற்சிகளையும் நிபுணர் வரையறுப்பார். எடைக்குறைப்பும் முறைப்படி, அறிவியல் ரீதியாக நிகழும்.
நீரீழிவு, இதயநோய், ஆட்டோ இம்யூன் குறைபாடு போன்ற பாதிப்புகள் கொண்டவர்கள் எடைக்குறைப்பு விஷயத்தை மிகவும் சீரியஸாக கையாள வேண்டும். மேலோட்டமாக எந்தக் கருத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
சரியான மருத்துவரின் வழிகாட்டுதல் தேவை. தனிநபரின் ஊட்டச்சத்து தேவைக்கேற்ப குறிப்பாக, இதய நோயாளிக்கு குறைவான சோடியம் கொண்ட உணவுகள், நீரிழிவு கொண்டவர்களுக்கு கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளைத் தீர்மானிக்க வேண்டும்.
உடல் எடையில் அதிவேகமான மாற்றம் நல்லதல்ல. படிப்படியாகவே எடைக்குறைப்பு நிகழ வேண்டும். தேவையின்றி உடலை சிரமப்படுத்தும் வழிகளையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் உணவியல் ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மினி இட்லி வித் சாம்பார்
கங்குவா – விற்கு எதிரான ஆதங்கம்… கவுன்சிலருக்கு எதிராக வருவதில்லை ஏன்? : இயக்குநர் கேள்வி!
நயன்தாரா நடிக்கும் ’ராக்காயி’!
மணிப்பூர் கலவரம்: மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த அமித்ஷா