திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மோப்ப நாய்க்கு அளிக்கப்பட்ட மரியாதை அனைவரையும் கவர்ந்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியது மோப்ப நாய் ப்ளான்ஸி. அது கடந்த பத்து ஆண்டுகளாக மோப்பநாயாக சிறப்பாக பணிபுரிந்த நிலையில் நேற்றுடன் (ஆகஸ்டு 29) ஓய்வு பெற்றது.
இதனையடுத்து அங்குள்ள பாதுகாப்புப்படை அதிகாரிகள் ப்ளான்ஸிக்கு பிரிவு உபசார விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தனர்.
அதன்படி மோப்பநாய் ப்ளன்ஸிக்கு மாலை அணிவித்து அதிகாரிகள் கௌரவித்தனர்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில் அதனை அமரவைத்து, கயிறு மூலம் ஜீப்பை இழுத்து சென்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் வித்தியாசமான முறையில் மோப்ப நாய்க்கு மரியாதை செய்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா