மொபைல் போனுக்கு மாற்றாக ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமானது, தற்போது ஸ்மார்ட் வாட்சை ரீப்ளேஸ் செய்யும் வகையில் அறிமுகமாகி இருப்பதுதான் ஸ்மார்ட் ரிங். நகை என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் மோதிரம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
பிரபல கேஜெட் நிறுவனமான போட் தற்போது ஸ்மார்ட் ரிங் ஜென்1 என்ற மோதிரத்தை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் ரிங் ஜென்1 ஆனது பிரீமியம் செராமிக் மற்றும் மெட்டல் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்க்கு ஸ்டைலிஷ் ஆன இந்த ரிங், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 6 மோஷன் சென்சார்களை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.
5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டது என்பதால் நீச்சல் மற்றும் குளிக்கும் போதும் பயன்படுத்தலாம். தூசி எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு.
ஆக்டிவிட்டி டிராக்கர், இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை, தூக்கம், SPO2, டச் கண்ட்ரோல் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
டச் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளதால் அடுத்தடுத்த பாடல் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களை மாற்றவும், போட்டோ கிளிக் செய்யவும் பயன்படுத்தலாம்.
ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி, பிட்னஸ் மேனேஜ்மெண்ட் போன்ற வசதிகளை வாரி வழங்கியுள்ளது போட் என்றே சொல்லலாம்.
ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரிங் ஜென் 1-ன் விற்பனை ஆக., 28 முதல் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் தொடங்கியுள்ளது.
ரூ.8,999க்கு விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட் ரிங் மூன்று அளவுகளில் கிடைக்கும், இதற்கு மாதத்தவணை வசதியும் உண்டு.
ஸ்மார்ட் ரிங் ஜென்1 பற்றிய மேலும் பல தகவல்கள்:
• நெட் வெயிட் – 7.9g
• ஒர்க்கிங் டைம் – 5 to 7 நாட்கள் (normal mode)
• ஸ்டேன்ட்பை டைம் – 30 நாட்கள்
• ப்ளூடூத் வெர்சன் – 5.0
• ஒர்க்கிங் டெம்ப்ரேச்சர் – -20°C முதல் 50°C வரை
• சார்ஜிங் டைம் – 1.5 மணிநேரம்
• வாட்டர் ரெசிஸ்டன்ஸ் – 5 ATM
ஆன்லைன் மார்கெட்டிற்கு புதுவரவாக வந்திருக்கும் இந்த ஸ்மார்ட் ரிங் ஜென்1 மக்கள் மத்தியில் வேகமாக பரவ துவங்கியுள்ளது.
இதை பற்றிய ரீல்ஸ்களும், வீடியோக்களும் வந்த வண்ணம் உள்ளன.
– பவித்ரா பலராமன்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
மராத்தா இட ஒதுக்கீடு… போராட்டத்தில் வெடித்த கலவரம்: மன்னிப்பு கேட்ட துணை முதல்வர்