Small exercises to protect eyes

ஹெல்த் டிப்ஸ்: கண்களை பாதுகாக்க… சின்ன சின்ன பயிற்சிகள் போதும்!

டிரெண்டிங்

நமது கண் ஒரு கேமிரா போலதான். நமது கண்ணுக்குள் லென்ஸ் இருக்கும். நாம் கண்களை அசைக்கும் போது, லென்ஸ் சுருங்கி விரியும்.

ஒரு பொருளின் பிம்பம் நமது கண்ணில் உள்ள லென்ஸ் வழியாக, விழித்திரையில் பதியும். விழித்திரையில் பதியும் பிம்பம், மூளைக்குச் சென்று, மூளையின் மூலமாகவே நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட கண்களைப் பாதுகாக்க சின்ன சின்ன பயிற்சிகள் போதும் என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

ஒரு நாற்காலியில் கையின் முட்டி தொடையில் படுமாறு உட்காரவும். வலது கையால் வலது கண்ணையும், இடது கையால் இடது கண்ணையும் மூடிக்கொண்டு, சந்தோஷம் தரும் பழைய தருணங்களை நினைத்துப்பார்க்கவும். 10 நிமிடங்கள் என தினமும் மூன்று முறை இந்தப் பயிற்சியை செய்யலாம்.

இரண்டு கால்களுக்கு இடையே சிறிதளவு இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பிறகு குதிகாலை லேசாகத் தூக்கி, கடிகாரத்தின் பெண்டுலம் போல வலப்பக்கமும் இடப்பக்கமும் தொடர்ந்து அசையவும். இடுப்பை வளைக்கக் கூடாது.

அசையும் போது எதிர்ப்பக்கம் தெரியும் ஏதேனும் ஒரு பொருளை நன்றாகக் கவனிக்கவும். நீங்கள் அசையாமல் அந்தப் பொருள் அசைவது போல தோன்றும்.

பிறகு, கண்களை ரிலாக்ஸாக மூடிக்கொண்டு, மீண்டும் அசையவும். ஏற்கனவே பார்த்த அந்த பொருளை நினைத்துப் பார்க்கவும்.

கண்களை வட்டமாக சுழற்றுங்கள். பின்னர் மீண்டும் அதற்கு நேர்மாறான திசையில் வட்டமாகச் சுழற்றுங்கள். இந்தப் பயிற்சியை தினமும் நான்கு முறை செய்யுங்கள்.

நேராக நின்று கொள்ளுங்கள். முகத்தைத் திருப்பாமல், இரு கண்களையும் முதலில் வலது புறமாகத் திருப்பவும். பிறகு இடதுபுறமாகத் திருப்பவும். இந்தப் பயிற்சியை ஆறு முறை செய்யவும்.

ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 20 25 தடவை கண் சிமிட்டவும். சீரான இடைவேளையில் கண் சிமிட்டினால் பார்வை தெளிவாகும். கண் அயர்வு நீங்கும்.

தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவும். கைகளில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, கண்ணுக்கு இரண்டு அங்குல தொலைவில் கைகளை வைத்து, தண்ணீரைத் தெளிக்கவும். தொடர்ந்து 20 முறை இவ்வாறு செய்யலாம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : கோவை ஐடி பார்க் திறக்கும் ஸ்டாலின் முதல் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை!

கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா கட்லெட்

சீமான் அந்நியனாவும் மாறுவார்… அம்பியாவும் மாறுவார்… : பிரேமலதா விமர்சனம்!

தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு…. கஸ்தூரிக்கு பாஜக கண்டனம்!

தென்னிந்தியாவின் எஃகு கோட்டை… இந்தியா டுடே பட்டியலில் இடம்பிடித்த ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *