வனப்பகுதியில் இரண்டு குட்டி யானைகள் செல்லமாகச் சண்டை போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானைகள் என்றாலே ஏராளமானவர்களுக்கு பிடிக்கும். உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் சில யானைகள் சமத்தாக நடந்து கொள்ளும். அதிலும் குட்டி யானைகள் பார்ப்பதற்கு அழகாகவும் சுட்டித்தனமாகவும் நடந்து கொள்ளும். அது பார்ப்பவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும்.
அந்த வகையில் காட்டுப் பகுதியில் இரண்டு குட்டி யானைகள் செல்லமாக சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. வனப்பகுதியில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறது.
அந்த கூட்டத்தில் இருக்கும் 2 குட்டி யானைகள் ஒன்றை ஒன்று தும்பிக்கையால் தாக்கி சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு குட்டி யானைகளில் சிறிதாக இருக்கும் யானை முதலில் கொஞ்சம் பெரிதாக இருக்கும் குட்டி யானையுடன் சண்டைக்குப் போகின்றது.
இருந்தாலும் பரவாயில்லை என்று ஆரம்பத்தில் அமைதியாக இருந்த மற்றொரு யானை சிறிது நேரத்திற்குப் பிறகு அதன் தும்பிக்கையால் சிறியதாக இருந்த குட்டியானையை தும்பிக்கையால் தாக்குகிறது.
இதனைக் கட்டுப்படுத்த முடியாத அந்த குட்டியானை பின்புறமாக நகர்ந்து சென்று பெரிய யானைகளின் கூட்டத்தில் சேர்ந்து கொள்கிறது.
“நீ வேணா சண்டைக்கு வாடா” என்று வடிவேலு பாணியில் குட்டியானை சண்டைக்குப் போய் பின்னர் பயந்து பெரிய யானைகளிடம் சென்று ஒளிந்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை கண்ட பலரும், “யானைகளின் சுட்டித்தனத்தில் இதுவும் ஒன்று”, குட்டி யானைகள் பாசமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன” என்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா