உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரைச் சந்திக்கும்போது, ‘நோய் எதிர்ப்பு
சக்தி இல்லாததால்தான் உங்களுக்கு அடிக்கடி உடல்நலப் பிரச்சினைகள் ‘வருது’
என்கிற வார்த்தையை கேட்டிருப்போம். Sleep is enough to fight disease
நோய் எதிர்ப்பு சக்தி என்பது நம் உடலை வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் தாக்கும்போது அவற்றை உடலில் இருந்து அழிக்கும் தன்மையே ஆகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவர்கள் சில மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கலாம் என்பார்கள். அதில் முக்கியமான இடம்பெறுவது நிம்மதியான தூக்கம்.
“தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கிறது.
தூக்கத்தின்போது நம்முடைய நோய் எதிர்ப்பு மேம்படுகிறது. தூக்கத்தின்போது
நோய்க்கிருமிகள் மற்றும் உடலினுள் ஏற்படக்கூடிய வீக்கங்களுக்கு எதிராக
நம்முடைய எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படுகிறது. தூக்கம் தடைபடும்போது
நோய்க்கிருமிகள் ஊக்கம் பெறுகின்றன.
ஒருநாள் தூக்கம் தடைபடுவதால் பிரச்சினை இல்லை. பல நாட்களாக சரியாக தூங்கவில்லை என்றால் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
இதைத் தவிர்க்க, இரவு 10 அல்லது 11 மணிக்குள் படுக்கைக்குச் சென்று அதிகாலையில் 6 மணிக்கு எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
“இந்த ஆழ்ந்த உறக்கத்துக்கு உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். இது இதயம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது. பல்வேறு வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது.
காலை எழுந்ததும் மன அமைதிக்காக பத்து நிமிட தியானம், உடல் அமைதிக்காக யோகா, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியோ அல்லது வீட்டிலிருந்தே எளிய உடற்பயிற்சியோ செய்யலாம்.
இது கலோரிகளை எரிக்க உதவும். மாலையில் சிறிது நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உடல் கட்டுக்குள் அடங்கி, கட்டுக்கோப்பாக இருப்பது மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளும் சரியான முறையில் இயங்கும். இதனால் மன அழுத்தம் குறையும். ஆரோக்கியமாக வாழலாம்” என்று அறிவுறுத்துகிறார்கள். Sleep is enough to fight disease