நம்மில் பெரும்பாலானோருக்குச் சருமத்தில் நிற மாற்ற பிரச்சினை ஏற்பட்டிருக்கும். அதாவது, முகத்தில் நெற்றிப் பகுதி ஒரு நிறத்திலும், கன்னங்கள் வேறொரு நிறத்திலும் காணப்படலாம்.
சிலருக்கு நெற்றி, கன்னம், கழுத்துப் பகுதிகளில் சருமத்தின் நிறம் கறுத்துக் காணப்படுவது இந்த நிற மாற்ற பிரச்சினையின் காரணமாகத்தான்.
சூரியன் மற்றும் மின் விளக்குகளில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் (UV) நம்மீது பட்டவுடன் சருமத்தில் ‘மெலனின்’ (Melanin) என்ற நிறமி சுரக்கும். Skin discoloration causes and treatment
புற ஊதா கதிர்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தின் செல்களைக் காக்கவே இந்த நிறமி சுரக்கிறது. இது இயற்கையான நிகழ்வு.
இதன் காரணமாகவே வெளியில் அதிக நேரம் சுற்றும்போது, நம் உடலில் சூரிய ஒளி படும் இடங்கள் எல்லாம் கறுத்து விடுகிறது. இந்த ‘டானிங்’ (Tanning) இயற்கையானது. நிற மாற்றம் வேறு காரணங்களாலும் ஏற்படலாம்.
“காஸ்மெடிக்ஸ் மற்றும் தலைவலி, உடல்வலிக்கு நாம் பயன்படுத்தும் தைலம் போன்ற மருந்துகள் உடலில் நிற மாற்றத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஹேர் டை அலர்ஜியின் காரணமாகச் சருமத்தில் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
உடலில் அதிகப்படியாகச் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் உடலில் எந்த இடங்களில் எல்லாம் சேமிக்கப்படுகிறதோ அந்த இடங்கள் எல்லாம் அடர்ந்த நிறத்தில் மாறும். தைராய்டு ஹார்மோன் பிரச்னை உள்ளவர்களுக்கும் உடலில் நிற மாற்றம் ஏற்படும்.
நிறமாற்ற பிரச்சினைக்குத் தீர்வு காண, சருமத்தின் தன்மைக்கு ஏற்ற ஃபேஸ்வாஷ்களை பயன்படுத்தலாம்.
டிரை ஸ்கின் உள்ளவர்கள் கெமிக்கல் இல்லாத ஃபேஸ்வாஷையும், ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் கிளைகாலிக் ஆசிட், சாலிசிலிக் ஆசிட் உள்ள ஃபேஸ் வாஷையும் பயன்படுத்தலாம்.
ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக நிற மாற்றம் ஏற்பட்டால் அந்தப் பிரச்சினைக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளவும்” என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அய்யா வழியா? அயோத்தி வழியா?: அப்டேட் குமாரு
அயோத்தியில் தன்னை முன்னிறுத்தும் மோடி: சுப்பிரமணியன் சுவாமி தொடர் தாக்குதல்!
டிஜிட்டல் திண்ணை: அறநிலையத்துறைக்குள் அயோத்தீ… சேகர்பாபுவை சுற்றி என்ன நடக்கிறது?
அயோத்தியில் ராமர்: டிரெண்டிங்கில் ராவணன்
Skin discoloration causes and treatment