பருவ நிலை மாறும்போது உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை சிலருக்கு அலர்ஜி ஏற்படும். இத்தகைய சரும அலர்ஜி இருப்பவர்களுக்கு தண்ணீர்தான் சிறந்த மருந்து. நிறையத் தண்ணீர் அருந்துங்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ஒவ்வாமையைப் போக்கும்.
குளிர்ந்த நீரில் குளித்தால்தான், அலர்ஜி உள்ள இடத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்கும்.
தனியாகத் துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜி வராமலும் பரவாமலும் தடுக்கலாம்.
ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், பன்னீர் கலந்து பூசிக்கொள்வதன் மூலம் அலர்ஜி நெருங்காது.
ஒவ்வாமை ஏற்படும் இடத்தில், எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயைத் தடவலாம்.
வேப்பிலையைத் தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, உடலில் தடவி, பிறகு குளிக்கலாம்.
சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையைப் பொறுத்து மட்டும் அல்ல… நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தினமும், உணவில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் எதெல்லாம் அலர்ஜியாகிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: டிரெண்ட் ஆகும் `புத்தா பௌல்’ டயட் – எல்லாருக்கும் ஏற்றதா?
என்னடா இங்க இருந்த பஸ் ஸ்டாண்ட காணோம்: அப்டேட் குமாரு