‘டிடி’யைத் தொடர்ந்து ஷிவாங்கியும் பாலிவுட் என்ட்ரி!

entertainment டிரெண்டிங்

தொகுப்பாளினி ‘டிடி’யைத் தொடர்ந்து ஷிவாங்கியும் பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார்.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினியை அடுத்து நடிகையும் பின்னணி பாடகியுமான ஷிவாங்கியும் பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் திவ்யதர்ஷினி, ரன்பீர் கபூர் – வாணி கபூர் நடித்திருக்கக்கூடிய படமான ‘ஷாம்ஷேரா’ படத்தின் அறிமுக விழாவைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பாலிவுட்டிலும் தொகுப்பாளினியாக நுழைந்திருக்கிறார். இது தனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் எனவும், இது திறமையான மற்ற தமிழ் தொகுப்பாளர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்திருந்தார்

மேலும் நேற்று ரன்பீருடன் படத்தின் புரோமோஷனுக்காக அணியுடன் சேர்ந்து உருவாக்கிய வீடியோவையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் டிடி. இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கியும் ரன்பீருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். ஷிவாங்கியும் ‘ஷாம்ஷேரா’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தான் பங்கு பெற்றதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் ஷிவாங்கி. மேலும், ரன்பீர் படத்திலும் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பங்கு என்ன என்பதையும் சீக்கிரம் பகிர்ந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷிவாங்கி இந்தப் புகைப்படங்களை பகிர்ந்ததில் இருந்து இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமாகி, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பிரபலமாகி, பின்பு தனி இசை, படத்தில் பின்னணி பாடல்கள், நடிப்பு என இந்த வரிசையில் தற்போது ஷிவாங்கியின் இந்த அடுத்த கட்ட வளர்ச்சி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷிவாங்கிக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆதிரா

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *