ஜி20 கூட்டம்: சிங்கப்பூர் அதிகாரி நடனம்!

Published On:

| By Monisha

சிங்கப்பூர் உயர் அதிகாரி சைமன் வோங் மேற்கு வங்காளம் டார்ஜிலிங்கில் நடைபெற்ற ஜி20 கூட்டத்தில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜி20 தலைமை இந்தியாவிடம் வந்த பிறகு, நாடு முழுவதும் பணிக்குழு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்கு வங்காளம், டார்ஜிலிங்கில் ஜி20 2வது சுற்றுலா பணிக்குழு கூட்டம் நேற்று (ஏப்ரல் 1) தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா முடக்கத்தின் போது பாதிக்கப்பட்ட சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங் டார்ஜிலிங் கிராம மக்களுடன் இணைந்து அவர்களது பராம்பரிய நடனத்தை மகிழ்ச்சியுடன் ஆடினார்.

https://twitter.com/SGinIndia/status/1642161603628941312?s=20

சைமன் வோங் நடனமாடிய வீடியோவை இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் ட்விட்டரில் பகிர்ந்து, “ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இரவு நிலவொளியில் தேயிலை பறித்தது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

ஜி20 பணிக்குழு கூட்டத்திற்கு வந்த சிங்கப்பூர் உயர் ஆணையர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மோனிஷா

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: ஸ்டாலின் தலைமையில் நாளை சமூக நீதி மாநாடு!

கலாஷேத்ரா பேராசிரியர் தலைமறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel