உடலில் துர்நாற்றம் வீச பல காரணங்கள் உள்ளன. ஹார்மோன் பிரச்சனை தொடங்கி பழக்க வழக்கம், உணவு, ஆடை, சோப்பு, என பல முக்கிய மாற்றங்களால் உடலில் துர்நாற்றம் வீச தொடங்குகிறது.
பெரும்பாலும் உடலில் அதிகப்படியான வியர்வை வழிந்து, அதன் மூலமே வியர்வை நாற்றம் உடல் முழுவதும் பரவுகிறது. இதற்கு மருத்துவ சிகிச்சை தொடங்கி பல வைத்தியங்கள் உள்ளன.
உடலில் வீசும் துர்நாற்றம் நமக்கு மட்டுமில்லை மற்றவர்களையும் பாதிக்கும் பிரச்சனையாக உள்ளன. உடல் துர்நாற்றத்தை சரிசெய்ய, வீட்டிலேயே இயற்கையாக செய்யக்கூடிய விஷயங்கள் பற்றி பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது, அதிகமாக வியர்க்கும் உடலின் பாகங்களில் பச்சை உருளைக்கிழங்கு துண்டுகளை தேய்க்கலாம். இதனால் வியர்வை மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
எலுமிச்சை சாறு உடல் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. இதனுடன், வியர்வை பிரச்சனையை நீக்கவும் இது உதவுகிறது. தினமும் குளிப்பதற்கு முன், தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து குளிக்கவும். இதனால் வியர்வை மற்றும் துர்நாற்றம் பிரச்சனை நீங்கும்.
பனிக்கட்டியின் உதவியுடன், வியர்வை மற்றும் துர்நாற்றம் ஆகியவற்றின் பிரச்சனையை நீக்க முடியும். முதலில் நீங்கள் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து, உடலில் அதிகமாக வியர்க்கும் பகுதிகளில் தேய்க்கவும்.
வெள்ளரிக்காயில் உள்ள குணங்கள் வியர்வை பிரச்சனையை நீக்குகின்றன. கோடையில் குளித்த பின் குளிர்ந்த வெள்ளரிக்காயை வியர்வை உள்ள இடங்களில் தேய்க்கலாம்.
கோடையில் உங்களுக்கு அதிக வியர்வை ஏற்பட்டால், அதை அகற்ற பிரிஞ்சி இலைகளை காய வைத்து அரைக்கவும். குளித்த பிறகு, அதை உடலில் தேய்த்துக்கொண்டால் வியர்வை குறையும்.
சுபஸ்ரீ
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…