பற்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும், பளிச்சென்று இருக்கும்படியும் வைத்துக்கொள்வது அவசியம். பற்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் முக அழகு கூடும். அவற்றுக்கு சில எளிய டிப்ஸ்…
பல் தேய்க்கும் பிரஷ்ஷில் உப்பை சிறிதளவும், எலுமிச்சைச் சாறு சில சொட்டுகளும் சேர்த்து பல் துலக்கினால் பற்களில் ஏற்படும் மஞ்சள் நிறம் மாறும்.
கேரட்டை பச்சையாகக் கடித்து சாப்பிட்டால் பற்கள் பலம் பெறும்.
புதினா இலையை காய வைத்து, பொடி செய்து, அதைக்கொண்டு பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று மின்னும்.
எலுமிச்சம்பழத் தோல்களை காய வைத்து, தூளாக்கி, உப்பு சேர்த்து, பற்களை துலக்கினால் பற்கள் பளபளவென மாறும்.
பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்து தின்றால் பற்களில் உள்ள கறை நீங்கும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
சாப்பிட்ட பின்பு உப்பு கலந்த நீரால் கொப்பளித்தால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: தலைக்கு எண்ணெய் தடவுவது அவசியமா?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: தோசைக்காய்ச் சட்னி
பியூட்டி டிப்ஸ்: கோடையிலும் உங்கள் சருமம் பளபளக்க…