”லூசு பெண்ணே”… எஸ்டிஆர் டான்ஸ் வைரல்!

டிரெண்டிங்

‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்துதல‘ படம் வெளியாவதற்கு தயாராகியுள்ளது.

சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கெளதம் கார்த்திக் , பிரியா பவானி சங்கர், டீஜெ அருணாச்சலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ’பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (மார்ச் 18) நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் உட்பட ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் போது மேடையில் சிம்பு பேசினார். அதன் பிறகு அவரது நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வல்லவன் படத்தில் இடம்பெற்றிருந்த “லூசு பெண்ணே” பாடலுக்கு மேடையில் நடனமாடினார்.

அவரது மாஸான நடன அசைவுகளைப் பார்த்து ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியில் கூச்சலிட்டு உற்சாகப்படுத்தினர். சிம்பு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மோனிஷா

ராகுல் வீட்டில் போலீஸ்: அதானி விவகாரத்தை திசை திருப்பவா?

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.