தினமும் கண்களில் காஜல் (Kajal) தடவிக்கொள்வது வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால், தினமும் கண்களில் காஜல் தடவுவது கண்களை பாதிக்கும் என அவ்வப்போது செய்திகளும் வெளியாகின்றன.
அது எந்த அளவு உண்மை? சருமநல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“காஜல் எனப்படும் கண் மையில் பாதிப்பை ஏற்படுத்தும் மிக முக்கியமான பொருள் ‘லெட்’ ( lead) அதாவது காரீயம். அது மிகவும் மோசமான நச்சுப்பொருளும்கூட.
அது நம்முடைய இதய அமைப்பு (Cardio Vascular System ), சிறுநீரகங்கள், மூளை வளர்ச்சி, நரம்புகளின் அமைப்பு என எல்லாவற்றையும் மிக மோசமாக பாதிக்கக்கூடியது.
குறிப்பாக, குழந்தைகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் அதிகம். குழந்தைகள் பொதுவாகவே எல்லாவற்றையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்கள். காஜலில் மட்டுமல்ல, குழந்தைகள் விளையாடும் மலிவான பொம்மைகளிலும் லெட் கன்டென்ட் அதிகமிருக்கும்.
அதனால்தான் குழந்தைகளுக்கு மலிவான, தரக்குறைவான பொம்மைகளை, விளையாட்டுப் பொருள்களை வாங்கிக்கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது.
மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்களும், உயர்தர ஃபுட் கிரேடு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவையும்தான் அவர்களுக்குப் பாதுகாப்பானவை.
எனவே, எந்த வகையிலுமே அதிக அளவில் லெட் உள்ள பொருட்களின் பயன்பாடு நல்லதல்ல. சிலருக்கு காஜல் பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது. அதிலும் கண்களுக்குள்ளும், வெளியிலும் அடர்த்தியாக காஜல் அப்ளை செய்துகொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் கண்களிலும் புருவங்களிலும் மை தீட்டக்கூடாது. அழகுக்காக, திருஷ்டிக்காக கன்னத்தில், கண்களில், புருவங்களில் மை தீட்டுவதால், குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தவிர கண் மை உபயோகிப்பதால் குழந்தையின் கண்களில் எரிச்சல், சிவந்துபோவது, கண்ணீர் வருவது, ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
இப்போது வெவ்வேறு கலர்களில் காஜல் கிடைக்கிறது. அது இன்னுமே ஆபத்தானது. அவற்றில் என்னென்ன கலக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியாமல், தரம் அறியாமல் பயன்படுத்துவது நிச்சயம் ஆபத்தானதுதான்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் ரசகுல்லா!
“எதிலும் வல்லவர் வேலு”… புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பாராட்டு!
டிஜிட்டல் திண்ணை: துணை முதல்வர் பதவி… உதயநிதி போட்ட திடீர் நிபந்தனை! லீக் செய்த ரஜினி
மாசக்கடைசியில லோ பட்ஜெட் படம்… அப்டேட் குமாரு