‘தினமும் நான் – வெஜ் சாப்பிடுவதால்தான் உனக்கு உடல் எடை கூடிப் போச்சு’ என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம். உண்மையில் அசைவ உணவுகள் எடையைக் கூட்டுமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
“அசைவ உணவுகள் எடையைக் கூட்டும் என்பது தவறான கருத்து. அசைவத்தை எப்படிச் சமைக்கிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த நேரம், எந்த அளவு என்பதைப் பொறுத்தே எடை கூடும். புரதச்சத்துக்கான மிக முக்கிய ஆதாரம் அசைவ உணவில் இருக்கிறது.
மீன் உணவுகளில் ஒமேகா 3, புரதம் அதிகமாக கிடைக்கிறது. கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. அந்தப் பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால் மீனை பொரிக்காமல் சாப்பிட வேண்டும். வேகவைத்தோ, க்ரில் செய்தோ சாப்பிடும்போது அது நன்மை செய்யும்.
முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மஞ்சள் கருவிலும் கோலீன், வைட்டமின் ஈ போன்ற சத்துகள் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லாதபட்சத்தில் முழு முட்டையையும் சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் இருக்கும்பட்சத்தில் மஞ்சள் கருவை தவிர்த்து விடலாம்.
ஆட்டுக்கறியில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது. ‘ஆர்கன் மீட்ஸ்’ (Organ Meats) என்று குறிப்பிடப்படுகிற ஈரல், மூளை போன்றவற்றில் கொழுப்புச்சத்து இன்னும் அதிகம். இத்துடன் அதிக கார்போஹைட்ரேட்டையும் பிரியாணியாகவோ, சாதமாகவோ எடுத்துக் கொள்ளும்போது கண்டிப்பாக எடை கூடவே செய்யும். இந்த விஷயங்களில் அசைவ உணவுகளில் கவனம் தேவை.
எடையைக் கூட்டுவதிலும், ஆரோக்கியத்தைக் கெடுப்பதிலும், எண்ணெய்க்கு முக்கிய பங்கு உண்டு. சரியான எண்ணெயை, சரியான விதத்தில் பயன்படுத்தாதபட்சத்தில் பக்கவிளைவுகள் நிச்சயம். நொறுக்குத்தீனிகள் பெரும்பாலும் எண்ணெய் உணவுகளாகவும் இருப்பதனால் இதிலும் கவனம் தேவை” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : கொடியை அறிமுகம் செய்யும் விஜய் முதல் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு வரை!
பியூட்டி டிப்ஸ்: உடற்பயிற்சி… இந்த விஷயங்களைக் கடைப்பிடிக்க மறந்து விடாதீர்கள்!
கொடி பறக்குதா? – அப்டேட் குமாரு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பண பரிவர்த்தனை நடந்ததா? : மோனிஷா விளக்கம்!