ஹெல்த் டிப்ஸ்: குதிகால் வலிக்குத் தீர்வு தரும் ‘ஷாக் வேவ்’ சிகிச்சை!

Published On:

| By christopher

நமது உடலில் அதிக பளுவைத் தாங்கக்கூடிய பகுதி என்றால் அது குதிகால்தான். நடக்கும்போது பாதிக்குப் பாதி தாங்கப்படுகிற எடையானது, வேக நடையாகவோ, ஓட்டமாகவோ மாறும்போது உடலின் ஒட்டுமொத்த எடையும் குதிகால்களில் விழும்.

இந்த அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது அதிகமான உடல் எடைதான் குதிகால் வலிக்கான முதல் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

குறிப்பாக, திடீரென ஏற்படும் உடல் பருமன்தான் குதிகால் வலிக்கான மிகப் பரவலான காரணம். எடை அதிகம் விழும்போது, வில் போன்று அமைந்துள்ள நம் பாதங்கள் ஸ்ட்ரெச் ஆகத் தொடங்கும். அதனால் ஏற்படுகிற வலிதான், குதிகால் வலியாக உணரப்படுகிறது.

குதிகால் வலிக்கான அடுத்த காரணம், பொருத்தமற்ற காலணிகள். செருப்போ, ஷூவோ, நம் கால்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கும்போது குதிகால் வலி வரும்.

கால்களைக் கோணலாக வைத்து நடப்பதாலும் வரும். புதிதாக ஹீல்ஸ் அணிய ஆரம்பித்திருப்போருக்கும் குதிகால் வலி வரும்.

இப்படி எந்தக் காரணங்களும் இல்லை, ஆனாலும் குதிகால் வலி இருக்கிறது என்றால், அதற்கான வேறு காரணங்களை ஆராய வேண்டியது அவசியம். ரத்தப் பரிசோதனையின் மூலம் நம் உடலில் இன்ஃப்ளமேஷன் எனப்படும் அழற்சி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளலாம்.

குதிகால் பகுதிகளில் உப்பு படிமானம் சேர்கிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். குதிகால் வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற தீர்வை நாட வேண்டும்.

உதாரணத்துக்கு, எடை அதிகரிப்பால் ஏற்பட்ட வலி என்றால், எடையைக் குறைக்க வேண்டும். பொருத்தமற்ற காலணிகள்தான் காரணம் என்றால் அதை மாற்ற வேண்டும்.

அழற்சி இருப்பது உறுதியானால் அதற்கான சிகிச்சை பெற வேண்டும். தேய்மானம் ஏற்பட்டிருந்தால், அதற்கான பயிற்சி மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

“காரணம் எதுவானாலும், குதிகால் வலிக்கான லேட்டஸ்ட் சிகிச்சையாக ஷாக் வேவ் சிகிச்சை உதவுகிறது.

குதிகால் பகுதிக்கான ரத்த ஓட்டம் இயல்பிலேயே குறைவாக இருக்கும். சிறுநீரகக் கற்களை உடைப்பது போல ஷாக்வேவ் தெரபி மூலம் குதிகால் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். அதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்” என்கிறார்கள் புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : தவெக அரசியல் பயிலரங்கம் முதல் அமரன் இசை வெளியீட்டு விழா வரை!

கிச்சன் கீர்த்தனா : கவுனி அரிசி அல்வா

‘உங்க கோயிலுக்கு வர்றோம்’- சல்மான் முன்னாள் காதலி பிஷ்னோயிடத்தில் உருக்கம்!

6 மாவட்டங்களில் கனமழை….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்?: அதிமுக நிர்வாகிக்கு ஐகோர்ட்டு கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share