சானியா மிர்சாவை வாழ்த்திய சோயிப் மாலிக்

டிரெண்டிங்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு அவரது முன்னாள் கணவர் சோயிப் மாலிக் இன்று(நவம்பர் 15) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் விவாகரத்து

இருவருக்கும் கடந்த அக்டோபர் 30, 2018அன்று ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் மிர்சா மாலிக் என்று பெயரிட்டனர்.

இதனைத் தொடர்ந்து சானியா துபாயில் தனது மகனுடனும், சோயிப் பாகிஸ்தானிலும் தனித்தனியாகவும் வசித்து வந்தனர்.

ஆனால் இவர்களது மகனின் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து துபாயில் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை சோயிப் மாலிக் தனது சமூக வளைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் சானியா மிர்சா புகைப்படங்கள் எதையும் பகிரவில்லை.

shoaib malik wish sania mirzza on her birthday today

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவிவந்தன.

இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு சோயிப் மாலிக்கின் நண்பர் ஒருவர் ’இருவரும் விவாகரத்து செய்திருப்பதாக உறுதிப்படுத்தினார்.

மேலும் இவர்கள் விவாகரத்திற்கு பாகிஸ்தானின் பிரபல மாடல் மற்றும் யூடியூபர் ஆயிஷா ஓமர்தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து சானியா மற்றும் சோயிப் இருவருமே கருத்து தெரிவிக்கவில்லை.

சானியாவை வாழ்த்திய சோயிப்

இன்று(நவம்பர் 15) சானியா மிர்சாவின் பிறந்தநாள். இவருக்கு ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் இவரது முன்னாள் கணவர் சோயிப் மாலிக்கும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அவர், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சானியா, மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துகிறேன். இந்த நாளை கொண்டாடவும்” என்று வாழ்த்தியுள்ளார்.

தற்போது சோயிப் மாலிக்கின் இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி உள்ளது.

மோனிஷா

எடப்பாடிக்கு புதிய சிக்கல்: மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் முறைகேடா?

கால் சவ்வு கிழிந்ததற்காக உயிர் பிரிவதா? பிரியா வீட்டில் ஜெயக்குமார்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *