கவலையில் விராட்… தேற்றிய ஷாருக்கான்: இணையத்தில் வைரல்!

Published On:

| By Monisha

sharukhan convienced virat

கொல்கத்தா அணிக்கு எதிராக தோற்றதை அடுத்து கவலையில் இருந்த விராட் கோலியை ஷாருக்கான் தேற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

16 வது ஐ.பி.எல் சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்ரல் 6) 9வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது.

இதனால் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஆர்சிபி அணி 17.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமாகத் தோற்றது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனிடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தைக் காண்பதற்காகவும் கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதலாளிகளின் ஒருவரான ஷாருக்கான் நேற்று (ஏப்ரல் 6) மைதானத்திற்கு சென்றிருந்தார்.

அவர் அங்குப் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டு கொல்கத்தா அணியின் வீரர்களை உற்சாகப்படுத்தினார். போட்டியின் முடிவில் 81 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோற்றதற்கு விராட் கோலி கவலைப்பட்டார்.

https://twitter.com/CricCrazyJohns/status/1644248335342272513?s=20

அவரை நடிகர் ஷாருக்கான் தேற்றுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. குறிப்பாக ஷாருக்கான் விராட் கோலியின் கன்னத்தில் தட்டி கொடுத்து, பின்னர் அவரை கட்டிப் பிடித்துக் கொண்டார்.

மேலும், ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் படத்தின் பாடலான ”ஜூம் ஜோ பதானின்’ நடன அசைவுகளை விராட் கோலியின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆடினார்.

விராட் கோலியும் ஷாருக்கானுடன் இணைந்து மெல்ல நடனமாடினார். மேலும், ஷாருக்கானின் உற்சாகத்தால் விராட் கோலி போட்டி தோல்வியில் இருந்து வெளியே வந்து மகிழ்ச்சியாக இருந்தார். அதனையடுத்து விராட் கோலியின் தோள்களை தட்டிக்கொடுத்தவாறு சிறிது நேரம் அவருடன் பேசினார் ஷாருக்கான்.

ஷாருக்கானின் இந்த செயல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோனிஷா

கர்நாடக தேர்தலில் போட்டி?: எடியூரப்பாவை சந்தித்த ஓபிஎஸ் அணி

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment