shahin afridi wished japrith burma

அப்பாவான பும்ரா: கிஃப்ட் கொடுத்த பாகிஸ்தான் வீரர்

டிரெண்டிங்

ஜஸ்பிரித் பும்ரா தந்தையானதற்கு பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று (செப்டம்பர் 10) இந்தியா – பாகிஸ்தான் விளையாடியது. ஆனால் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று மழையின் இடையே பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவை அன்பு மழையில் நனைய வைத்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பும்ராவிற்கு சக கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு கொடுத்து பும்ராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போட்டி ஒத்திவைத்ததால் நடந்து சென்று கொண்டிருந்த பும்ராவிடம் சென்று ”குழந்தை பிறந்ததற்கு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் மனதார வாழ்த்துக்கள். கடவுள் அவரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். அவரும் உங்களைப் போல் புகழ்பெற்றவராக வரவேண்டும்” என்று ஷாஹீன் அஃப்ரிடி வாழ்த்தினார்.

இதனையடுத்து பும்ரா மகிழ்ச்சியாக கைக்குலுக்கி நன்றி தெரிவித்தார். பின்னர் இருவரும் மகிழ்ச்சி பொங்க பிரிந்து சென்றனர்.

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ‘பாகிஸ்தான் கிரிக்கெட்’ ”மகிழ்ச்சியைப் பரப்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்திய வீரருக்கு வாழ்த்து சொல்லி பாகிஸ்தான் வீரர் பரிசு கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மோனிஷா

இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு!

சுற்றுலா சென்று திரும்பும் போது கோர விபத்து: 7 பேர் பலி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0