ஈரோடு கிழக்கு சுவாரஸ்யம்: பொன்முடியிடம் ஓட்டுக்கேட்ட செல்லூர் ராஜூ

ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் பொன்முடியிடம் ஓட்டு கேட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கில் வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மாதிரியாக கருதப்படும் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுகவும், திமுக கூட்டணியும் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.

தேமுதிகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி விழா கோலம் பூண்டுள்ள ஈரோடு கிழக்கில் அதிமுக தொண்டர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது எதிர்திசையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் காரில் வாக்கு சேகரிக்க வந்தார்.

கார் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கத் தொண்டர்களுடன் வந்த செல்லூர் ராஜூ, பொன்முடிக்கு வணக்கம் வைத்தபடியே, வாங்க அமைச்சரே, ஓட்டு கேட்கிறோம் அமைச்சரே… பாருங்க அமைச்சரே என்று கூறியபடியே வணக்கம் வைத்தவாறு கடந்து சென்றார்.

அப்போது பொன்முடியும் வணக்கம் வைத்து , கேளுங்கையா என கூறி சென்றார்.

எதிர் எதிர்க் கட்சியில் இருக்கும் அமைச்சர் பொன்முடியும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் சிரித்துக்கொண்டே வணக்கம் வைத்தது அதிமுக, திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியா

ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு வளையத்தில் கோயமுத்தூர்!

1427 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts