டெல்லியில் இன்று (ஏப்ரல் 20) இந்தியாவின் இரண்டாவது ஆப்பிள் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் போனுக்கு இந்தியாவில் பிரத்யேக ஷோரும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேல்டு டிரைவ் மாலில் இந்தியாவின் முதல் ஆப்பிள் ஷோரும் திறக்கப்பட்டது.
இதில் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 20) டெல்லியில் இரண்டாவது ஆப்பிள் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஷோரூமை அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் திறந்து வைத்தார். புதிய ஷோரூமில் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக 20 மொழிகள் தெரிந்த 100 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதோடு முழுக்க முழுக்க சோலார் மின்சாரத்தில் இயங்கும் வகையில் ஷோரூம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் இருக்கும் ஆப்பிள் ஷோரூம்களில் இருக்கும் வசதி இந்த ஷோரூமிலும் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு இங்கு வந்து ஆர்டர் செய்த பொருள்களை பெற்றுக்கொள்ள முடியும். பழைய போன்களை மாற்றிக்கொள்வது, புதிய ஐபேட் வாங்குவது போன்றவையும் கிடைக்கும். காலை 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இந்த ஷோரும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இரட்டை இலை : கர்நாடக தேர்தல் அதிகாரிக்குச் சென்ற முக்கிய கடிதம்!
மாதவரம் சுதர்சனத்தின் ஆயிரம் ஏக்கர் மாந்தோப்பு: துரைமுருகன் வெளியிட்ட ரகசியம்!
Comments are closed.