சானியா மிர்சா – சோயிப் மாலிக் விவாகரத்து?

டிரெண்டிங்

சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர்.

இதனையடுத்து மாலிக் தனது முன்னாள் மனைவியான ஆயிஷா சித்திக்கிடம் இருந்து பிரிந்து வந்து, சானியா மிர்சாவை கடந்த 2010ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் கடந்த அக்டோபர் 30, 2018 அன்று ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் மிர்சா மாலிக் என்று பெயரிட்டனர்.

பிரபலமான விளையாட்டு வீரர்களின் நாடு கடந்த காதல் என்பதால் இருவரையும் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகும். ஆனால் கடந்த சில மாதங்களாக இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வலு சேர்க்கும் இணைய பதிவுகள்!

கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சா தனது மகனுக்கு உணவு ஊட்டுவதைப் போன்று ஒரு படத்தை பதிவு செய்து இருந்தார். அப்போது இருந்தே பிரிவு குறித்த சந்தேகங்களையும் ஊடகங்கள் எழுப்பி வந்தன.

அதனை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சாவின் மூக்கில் அவரது மகன் முத்தம் இட்டு அன்பை பறிமாறிக் கொள்வதைப் போன்று பதிவிட்டு இருந்தார். அதில், ”இந்த தருணங்கள் என்னை மிகவும் கடினமான நாட்களுக்கு கடத்திச் சென்றன” என்று பதிவிடப்பட்டு இருந்தது.

மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவில், ”உடைந்த இதயங்கள் எங்கே செல்லும்… அல்லாவை தேடியே” என்று பதிவிட்டு இருந்தார்.

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தங்களது மகனின் பிறந்தநாளை இருவரும் சேர்ந்தே துபாயில் கொண்டாடி இருந்தனர். அதுகுறித்த புகைப்படங்களை சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதும் வைரலாயின.

ஆனால், சானியா மிர்சா தன்னுடைய சமூக வலைதளங்களில் அதனை பகிரவில்லை.

இருவரும் விவாகரத்து?

இந்த நிலையில் பாகிஸ்தான் ஊடகங்கள், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சில மாதங்களாகவே பிரிந்து வாழ்கின்றனர் என்றும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளனர் என்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

எனினும் விவாகரத்து குறித்த செய்தி தொடர்பாக இருதரப்பிலும் இருந்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

கிறிஸ்டோபர் ஜெமா

கெர்சன் நகர மக்களை வெளியேற்ற ரஷ்ய ராணுவம் முயற்சி: உக்ரைன் குற்றச்சாட்டு

ட்விட்டர் : எலான் மஸ்க்கின் புதிய கண்டிஷன்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *