அக்டோபரில் வெளியாகிறது சாம்சங் கேலக்சி S23 FE!

Published On:

| By Kavi

Samsung Galaxy S23 FE

புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஸ்மார்ட் போன்களுக்கு சவால் விடும் வகையில் களம் இறங்க இருப்பதுதான், சாம்சங் கேலக்சி S23 FE. சாம்சங் பேசிக் மாடலான SH100 காலகட்டம் தொடங்கி இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு ப்ராண்ட் ஆகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், சாம்சங் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்(X) தளத்தில் வெளிவரப்போகும் சாம்சங் கேலக்சி S23 FE மாடல் குறித்தான விவரங்களை வெளியிட்டுள்ளது.

The New Epic Coming Soon என்ற கேப்சனுடன் இந்த ஸ்மார்ட் போன் பற்றிய தகவல்களை வெளியிட்டள்ளது. Exynos 2200 அல்லது Snapdragon 8 Gen1 ப்ராசசர் கொண்டிருக்கும் என்றும், 6.3 இன்ச் OLED டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இது சாம்சங் கேலக்சி எஸ்23 மாடலைப் போலவே மூன்று ரியர் கேமரா இடம் பெறும். OIS வசதியுடன் 50MP+12MP+8MP ரியர் கேமராவும், 10MP செல்ஃபி கேமராவுடனும் வருகிறது.

பிளாக் கிராபைட், பர்ப்பில் லேவண்டர், பியர்ல் ஒயிட், ஆலிவ் போன்ற நான்கு நிறங்களில் வெளியாகலாம் என்று எதிப்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்சி S23 FE ஸ்மார்ட் போன் 4500mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் இடம்பெறும் என்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெரிகிறது.

8GB ரேம்128GB ஸ்டோரேஜ் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் வெளியாகிறது. ஆன்ராய்டு 13 இடம்பெறுகிறது.

210 கிராம் எடை மற்றும் 8.2mm தடிமனில் வெளியாகிறது சாம்சங் கேலக்சி S23 FE. 128GB ஸ்டோரேஜ் ரூ.54,999க்கும், 256GB ஸ்டோரேஜ் ரூ.59,999க்கும் விற்பனைக்கு வரலாம். இது, இந்தியாவில் அமேசான் தளம் வழியாக அறிமுகமாக உள்ளது.

சாம்சங் கேலக்சி S23 Fan Edition ஸ்மார்ட் போன் மாடலை பொருத்தவரை எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது என்றுதான் சொல்ல வேண்டும், சமூக வளைதளங்களில் வரும் தகவல்கள் ஒரு புறம் இருக்க, சாம்சங் நிறுவனம் தன் பங்கிற்கு COMING SOON போன்ற அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது.

-பவித்ரா பலராமன்

தற்கொலை எண்ணம் எனக்கும் தோன்றியது: கமல்ஹாசன்

சைபர் க்ரைம் மோசடி: தப்பிப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel